செய்திகள் :

நடுக்கடலில் மாயமான தூத்துக்குடி மீனவர்கள் 6 பேர் மீட்பு

post image

நடுக்கடலில் மாயமான திரேஸ்புரத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச எல்லை அருகே தத்தளித்த 6 மீனவர்களை சக மீனவர்கள் மீட்டுள்ளனர். படகில் இருந்து எரிபொருள் வெளியேறியதால் 6 மீனவர்களும் அடித்துச்செல்லப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது .

தூத்துக்குடி மாவட்டம், திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சதீஷ்குமார் என்பவரது படகில் விக்னேஷ், அல்போன்ஸ், ஜூடு, சுதர்சன், ஜார்ஜ் ஆகிய 6 மீனவர்கள் கடந்த 21 ஆம் தேதி ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

மேட்டுப்பாளையம் அருகே நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்னி கார்!

இவர்கள் ராமேசுவரம் பாம்பன் கடல் பகுதியில் இருந்து 30 கடல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்துள்ளனர். கடந்த 26 ஆம் தேதி கரை திரும்ப வேண்டியவர்கள் கரை திரும்பாததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவர்களை தொடர்புகொள்ளும் முயற்சியும் பலனிக்கவில்லை.

எனவே, இது குறித்து தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி சங்கம் சார்பில் தூத்துக்குடி மீன்வளத்துறை, மாவட்ட நிர்வாகம், கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை, இந்திய கடலோர பாதுகாப்புப் படை ஆகியோருக்கு புகார் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை: இன்றிரவு வரை கனமழை நீடிக்கும்!

ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை மாலை கரையைக் கடக்கத் தொடங்கிய நிலையில், நள்ளிரவு 11.30 மணியிலிருந்து 12.30 மணிக்குள் மரக்காணம் அருகே கரையைக் கடந்தது. இந்த நிலையில், புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்ட சு... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: இபிஎஸ்

ஃபென்ஜால் புயல் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயல் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த ஒரு வார காலமாக ப... மேலும் பார்க்க

வலுவிழந்தது ஃபென்ஜால் புயல்

கரையைக் கடந்த ஃபென்ஜால் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. காலை 11.30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு தென்மேற்... மேலும் பார்க்க

திராவிட சித்தாந்தத்தையே விஜய் பேசுகிறார்: சென்னை திரும்பிய அண்ணாமலை பேட்டி

திராவிட சித்தாந்தத்தையே விஜய் பேசுகிறார் என்று நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். மூன்று மாத கால லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை ஞாய... மேலும் பார்க்க

நீடாமங்கலம் அருகே மாநில அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டி

நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.போட்டிகளை பெங்களூர் தர்மராஜ் குடும்பத்தினர் தொடங்கி வைத்தனர். பூவனூர் ... மேலும் பார்க்க

மேட்டுப்பாளையம் அருகே நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்னி கார்!

மேட்டுப்பாளையம் அருகே நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்த ஆம்னி காரால் பரபரப்பு நிலவியது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிட்டே பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி நாகராஜ். இவரது மனைவி முத்துலட... மேலும் பார்க்க