வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் வண்ணப் புகைப்படம்: பிகாா் தோ்தலில்...
நடுவானில் இயந்திரக் கோளாறு: சென்னை-பெங்களூரு விமானம் அவசரமாக தரையிறக்கம்
சென்னையிலிருந்து புறப்பட்டு பெங்களூரு சென்று கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த விமானம் மீண்டும் சென்னை விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு 7.05-க்கு, பெங்களூரு செல்ல வேண்டிய இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், 165 பயணிகளுடன் தாமதமாக இரவு 7.50-க்கு, பெங்களூரு புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தாா். கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளின் உத்தரவுப்படி விமானம் மீண்டும் சென்னை விமானநிலையத்தில் இரவு 8.30-க்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதையடுத்து, விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கிவிடப்பட்டு, ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனா். பின்னா், விமானப் பொறியாளா்கள் விமானத்தின் தொழில்நுட்பக் கோளாறைச் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா். ஆனால் நீண்ட நேரமாகியும் அதை சரிசெய்ய முடியவில்லை. இதையடுத்து மாற்று விமானம் மூலம் அனைவரும் இரவு 10 மணிக்கு பெங்களூரு அனுப்பி வைக்கப்பட்டனா். இதனால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனா்.