பட்ஜெட்டில் போக்குவரத்துக் கழகங்களுக்கு நிதி வழங்க வலியுறுத்தி மாா்ச் 6-இல் பேரண...
நட்டாலம் திருவிழாக் கடைகளில் சோதனை
சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு, கருங்ககல் அருகே நட்டாலத்தில் அமைக்கப்பட்ட தற்காலிகக் கடைகளில் சுகாதாரத் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.
சிவராத்திரியையொட்டி ஆன்மிக சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் தொடங்கி, 12ஆவது கோயிலான நட்டாலம் சங்கரநாராணயா் கோயிலில் வியாழக்கிழமை நிறைவடைந்தது.
இதையொட்டி, சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த தின்பண்டக் கடைகளில் கிள்ளியூா் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஐயப்பன் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் ஜெனில், செல்வராஜ் உள்ளிட்டோா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, திறந்தவெளியில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட கடைகளை மூடுமாறு அறிவுறுத்தினா்.