செய்திகள் :

'நண்பன்' ஈரானை தாக்கியும் சீனா அமைதி காப்பது ஏன்?!

post image

ஈரான், சீனா - இரண்டும் மிக நல்ல நட்பு நாடுகள்.

எந்த அளவுக்கு நட்பு நாடுகள் என்றால், ஈரான் போர் தொடங்கி 13 நாள்கள் ஆகின்றன. இந்த 13 நாள்களில் பல பில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல்கள் ஹார்மோஸ் ஜலசந்தியில் நிற்கின்றன.

'நிற்கின்றன' என்று சொல்வதை விட, ஈரானால் 'நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன' என்று சொல்லலாம்.

இதனால், பல நாடுகள் பிரச்னையில் சிக்கியுள்ளன. இதற்கு இந்தியாவே சிறந்த உதாரணம்.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

ஆனால், போர் தொடங்கிய பின்னும்கூட, ஈரானில் இருந்து சீனாவிற்கு சரியாகக் கச்சா எண்ணெய் சென்று கொண்டிருக்கிறது. சொல்லப்போனால், அந்தக் கச்சா எண்ணெயின் அளவே அதிகரித்திருக்கிறது என்று அறிக்கைகள் கூறுகின்றன.

வழக்கமாக, ஈரானில் இருந்து சீனாவிற்கு 2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் தினமும் செல்லும். இப்போது 2.1 மில்லியன் பேரல்கள் சென்று கொண்டிருக்கின்றனவாம்.

ஈரான் தன்னுடைய 80 சதவிகித கச்சா எண்ணெய் ஏற்றுமதிகளைச் சீனாவிற்கு தான் செய்கிறது. சீனா பயன்படுத்தும் 13 - 17 சதவிகித கச்சா எண்ணெய் ஈரானுடையது.

இதுபோக, ஈரானில் சீனா எக்கச்சக்கமாக முதலீடு வேறு செய்திருக்கிறது.

உலக நாடுகள் எல்லாம் ஈரான் மீது தடை விதித்த போது, சீனா தொடர்ந்து அங்கே இருந்து எண்ணெய் வாங்கி, அதன் பொருளாதாரத்திற்கு பெரும் உதவி செய்தது.

அப்படி இருந்தும் ஈரான் மீதான போருக்குச் சீனா கண்டனங்களைக் கூட 'பெரியளவில்' பதிவு செய்யவில்லை.

ட்ரம்ப் - ஜி ஜின்பிங்
ட்ரம்ப் - ஜி ஜின்பிங்

சீனாவில் 'ஸ்ட்ரேட்டஜி'

இவ்வளவு அமைதியாக சீனா ஏன் உள்ளது என்று பார்த்தால், இது ஒருவித 'ஸ்ட்ரேட்டஜி'.

வளர்ச்சி... வளர்ச்சி... வளர்ச்சி - இது தான் சீனாவின் முழு மூச்சு.

இந்த வளர்ச்சியில் சீனாவின் மிகப்பெரிய போட்டியாளர், 'அமெரிக்கா'.

அமெரிக்கா இப்படியொரு போரில் இருக்கும் போது, அதற்கு அதனுடைய வளர்ச்சியின் மீதான கவனம் சற்றுப் பிசகும். அடுத்ததாக, தன்னுடைய போட்டியாளரை (சீனா) அதிகம் கவனிக்காது.

போரினால் ராணுவ வீரர்கள் உயிரிழப்புகள் முதல் அதிகம் செலவாகும் தளவாடங்கள் வரை அனைத்துமே அமெரிக்காவிற்கு இழப்பு தான்.

இந்த நேரத்தில் சீனா எளிதாகத் தங்களது வளர்ச்சியில் ஃபோக்கஸ் செய்யலாம்.

சீனா எப்படி உதவி செய்கிறது?

முக்கியமாக, சீனாவின் கொள்கைப்படி, அது எந்த நாட்டுப் பிரச்னையிலும் தலையிடாது.

அடுத்ததாக, சீனா ஈரானிடம் இருந்து மட்டும் எண்ணெய் வாங்கவில்லை. அது ரஷ்யா, ஈராக், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்தும் வாங்குகிறது. அதனால், ஈரானில் பிரச்னை ஏற்பட்டதும், சீனாவிற்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடாது.

ஆனால், சீனா மற்றும் ரஷ்யாவிடம் இருந்து அரசியல் ரீதியாகவும், வேறு வழிகளிலும் உதவி வருகிறது என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி குறிப்பிட்டார்.

ஆனால், அது எந்த வழி என்பது அவர் விளக்கமளிக்கவில்லை.

அந்த வேறு வழிகள் பொருளாதாரம், தொழில்நுட்பம் போன்றவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால், இந்தச் சண்டையில் சீனா வெளிப்படையாகப் பங்கேற்காது.

ஆக, சீனா ஈரான் போரில் இருக்கு... ஆனா இல்லை.

சென்னை ரயில் நிலையங்களில் இந்தி எழுத்துகள் அழிப்பு போராட்டத்தில் மே 17 இயக்கத்தினர்!

தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது. அந்தவகையில் சென்னையில் உள்ள ரயில் நிலையங்களின் பெயர் பலகைகளில் இருக்கும் இந்தி எழுத்துகளை அழித்து திருமுருகன் காந்தி உள்... மேலும் பார்க்க

`எங்க ஆளுங்கதான், ஆனா திமுக MLA' - ஒற்றை சீட் எனும் முட்டுச் சந்தில் மதிமுக! - காரணம் யார்?

நேற்று மாலை முதல் சமூக ஊடகங்கள் முழுக்க கட்சியில் மிச்சமிருக்கிற மதிமுக தொண்டர்களின் வலிகள் நிறைந்த பதிவுகளைப் பார்க்க முடிகிறது.மதிமுகவிலிருந்து வெளியேறிவிட்ட மல்லை சத்யா கூட, "புரண்டு புரண்டு படுத்த... மேலும் பார்க்க

புதுச்சேரி: `வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் ஹோட்டல்களுக்கு சீல்!’- மாவட்ட ஆட்சியர் அதிரடி

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் காரணமாக ஹார்முஸ் நீரிணியை மூடியது ஈரான். உலகின் 20% எண்ணெய் வர்த்தகம் இந்த நீரிணை வழியாகத்தான் நடைபெறுகிறது என்பதால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்க... மேலும் பார்க்க

'தேமுதிகவுக்காக எதுக்கு தியாகம் பண்ணணும்?' - எரிச்சலில் கூட்டணி கட்சிகள்; அறிவாலயத்தின் ப்ளான் என்ன?

கூட்டணி கட்சிகளிடம், தொகுதிகளை குறைத்துக் கொள்ள சொல்லி வலியறுத்திக் கொண்டிருக்கிறது அறிவாலயம். திமுகவின் வலையில் முதல் ஆடாக தலையை கொடுத்திருக்கிறது மதிமுக.அறிவாலயம்கடந்த முறை 6 சீட்டுகளை வாங்கிய மதிமு... மேலும் பார்க்க

Chennai : 'ஸ்டாக் இல்லை' - காலியான பெட்ரோல் பங்குகள்; பதற்றமடையும் சென்னை வாகன ஓட்டிகள்!

அமெரிக்கா - ஈரான் போரால் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் போன்ற எரிவாயு பொருட்களின் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்று பல பெட்ரோல் பங்குகளில் 'ஸ்டாக் இல்லை' என்கிற பலகை ... மேலும் பார்க்க

தேர்தல் களம்: `விஜயகாந்த் டு விஜய்' தமிழ்நாட்டில் 'மூன்றாம் அணி' வெற்றி சாத்தியமா? - ஓர் அலசல்!

தமிழ்நாட்டில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு துருவ அரசியலைத் தாண்டி ஒரு 'மூன்றாம் அணி' அமைவதற்கான முயற்சிகள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகின்றன. விஜயகாந்தின் தேமுதிக (2006), மக்கள் நலக் கூட்ட... மேலும் பார்க்க