செய்திகள் :

நத்தம் அருகே பிரம்மாண்ட மீன்பிடித் திருவிழா!

post image

நத்தம் அருகே கருத்தலக்கம்பட்டியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோசுகுறிச்சி ஊராட்சிக்கு உள்பட்ட கருத்தலக்கம்பட்டியில் 20 ஏக்கர் பரப்பளவில் சத்திர கண்மாய் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கண்மாயில் நீர் வற்றியவுடன் ஊர் சார்பில் கண்மாயில் உள்ள அனைத்து மீன்களையும் சுற்று வட்டார பொதுமக்கள் அனைவரும் கட்டணம் ஏதுமின்றி பிடித்துக் கொள்வதற்கு அனுமதி அளிக்கும் சமத்துவ மீன்பிடித் திருவிழா நடத்துவது வழக்கம்.

தற்போது கண்மாயில் நீர் குறைந்ததால் மீன்பிடித் திருவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கருத்தலக்கம்பட்டி, கும்பச்சாலை, புதூர், குரும்பபட்டி, நல்லூர், கோட்டையூர், கரையூர், சக்கபிச்சம்பட்டி, அரவக்குறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டார கிராம மக்களும் மற்றும் வெளி மாவட்டங்களான சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களிலிருந்தும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீன்பிடித் திருவிழாவில் ஒரே நேரத்தில் ஒற்றுமையாக கண்மாயில் இறங்கி கச்சா, வலை, கூடை மற்றும் ஊத்தா மீன் பிடிக் கூடைகளை கொண்டு மீன்களைப் பிடித்தனர். இதில் ஜிலேபி, குரவை, ரோகு, பாப்லெட் உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்தன.

ஒரு முதியவருக்கு 10 கிலோ எடை கொண்ட மீசை கெளுத்தி மீன் கிடைத்தது. அதை மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு எடுத்துச்சென்றார். இந்த மீன்பிடித் திருவிழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்து தூக்குவாளி, சட்டி, சாக்கு பைகளிலும் மீன்களை நிரப்பி சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

பொதுமக்களுக்கு மீன் குஞ்சுகள் உள்ளிட்ட 1 கிலோ முதல் 10 கிலோ எடை வரை மீன்கள் கிடைத்தன. கிடைத்த மீன்களை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

இதையும் படிக்க: பாகிஸ்தானில் இரண்டே மாதங்களில் 100 குழந்தைகள் உயிரிழப்பு! பருவமழையால் பெரும் பாதிப்பு!

A grand fishing festival was held at Kartalakampatti near Natham, attended by over 5,000 people.

பாமகவிலிருந்து 3 எம்எல்ஏக்கள் நீக்கம்! - ராமதாஸ் உத்தரவு

பாமகவில் இருந்து சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் ஆகிய 3 எம்எல்ஏக்களை தற்காலிகமாக நீக்கி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கறிஞர் பாலுவையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்... மேலும் பார்க்க

கூட்டணி பற்றி இபிஎஸ் பேச்சு: நயினார் நாகேந்திரன் சொன்ன பதில் என்ன?

கூட்டணி பற்றி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதில் எந்த உள்நோக்கமும் கிடையாது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "2026 த... மேலும் பார்க்க

வேலூரில் நாய்க்கறி விற்பனை செய்வதாக வதந்தி: பொதுமக்கள் போராட்டம்

வேலூரில் நாய்க்கறி விற்பனை செய்வதாக பரவிய வந்தியைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர், சலவன் பேட்டையைச் சேர்ந்தவர் வடிவேலு (வயது 48). சமூக ஆர்வலர். இவர் வேலூர் பர்மா பஜாரில் ஓட்டல்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம்: கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழா இன்று(ஜூலை 20) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூலை 28-ம் தேதி காலை ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெறுகிறது.108 வைணவ திவ... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலின் கோவை, திருப்பூர் பயணம்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஜூலை 22,23 ஆகிய தேதிகளில் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.கள ஆய்விற்காக கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்லும் முதல்வர் மு.க. ஸ... மேலும் பார்க்க

விஜய் பாராட்டைத் தொடர்ந்து பன் பட்டர் ஜாம் படத்திற்கு நல்ல வரவேற்பு: நடிகர் ராஜூ ஜெயமோகன்

விஜய் பாராட்டியதைத் தொடர்ந்து பன் பட்டர் ஜாம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக நடிகர் ராஜூ ஜெயமோகன் தெரிவித்துள்ளார். நடிகர் ராஜூவ் ஜெயமோகன் நடிப்பில் உருவாகியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படம் வெ... மேலும் பார்க்க