Arjun: ``ஜென்டில்மேன் படமும் அப்படிதான்!'' - பட விழாவில் நடிகர் அர்ஜுன்
நர்சிங் மாணவியுடன் வந்த காதலன், வீட்டில் அடைக்கலம் கொடுத்த நண்பனையே கொன்ற கொடுமை - என்ன நடந்தது?
கும்பகோணம் அருகே உள்ள மூப்பக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (25) தப்பாட்ட கலைஞர். இவருக்கு சர்மிளா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
இவருடைய நண்பர் அசூர் பகுதியைச் சேர்ந்த அபிஷேக்(19), அறுவடை மிஷின் டிரைவர். அபிஷேக்கின் நண்பர் அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த பிரவின் (19). இவரும் தப்பாட்ட கலைஞர். அபிஷேக் 17 வயது நர்சிங் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி அந்த மாணவியை திருமணம் செய்வதற்காக அபிஷேக் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சென்றனர். இறுதியாக, பாலாஜியின் வீட்டில் தங்குவதற்கு சென்றுள்ளனர். அவரும் அடைக்கலம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கல்லூரிக்கு சென்ற மகள் வீட்டிற்கு திரும்பி வராததால் மாணவியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.
அப்போது பாலாஜி வீட்டில் இருப்பது தெரிந்ததும் அந்த மாணவியின் பெற்றோர் அபிஷேக்கின் தம்பியுடன் சென்று சமாதானம் செய்து மகளை வீட்டிற்கு அழைத்து சென்று விட்டனர்.
அபிஷேக் தனது செல்போனை பாலாஜியிடம் கொடுத்து வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு அபிஷேக், பிரவின், பாலாஜி மூவரும் சேர்ந்து டுவீலரில் மது குடிக்க சென்றுள்ளனர்.
அசூர் அருகே உள்ள சாத்தங்குடி சாரதி நகர் பகுதியில் உள்ள வாய்க்கால் பகுதியில் அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது அபிஷேக், காதலியுடன் நான் உன் வீட்டில் இருந்ததை ஏன் அவர் பெற்றோரிடம் சொன்னாய் என கேட்டு பாலாஜியிடம் கேட்டு தகராறு செய்ய அதற்கு பாலாஜி நான் சொல்லவில்லை என மறுத்திருக்கிறார்.

அப்போது நான் கொடுத்த என்னுடைய செல்போனை திருப்பி கொடு என கேட்டுள்ளார். அதற்கு பாலாஜி செல்போன் என்னிடம் இல்லை, முன்பே திருப்பி கொடுத்துவிட்டேன் என்றுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதம் கைகலப்பாக மாறியது.
பாலாஜி கத்தியால் அபிஷேக்கை குத்த முயன்றதாக சொல்லப்படுகிறது. அப்போது, அபிஷேக், பிரவின் இருவரும் சேர்ந்து பாலாஜி கையில் இருந்த கத்தியை பிடிங்கி விட்டனர்.
மேலும் அருகில் கிடந்த கட்டைகள் மற்றும் மது பாட்டில்களால் பாலாஜியை தாக்கியுள்ளார். மேலும் கத்தியால் குத்தியதோடு பாலாஜியை வாய்க்காலில் தள்ளி சேற்றில் அமுக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதற்கிடையே இரவில் வெளியில் சென்ற கணவர் வீட்டிற்கு வராததால், பாலாஜியின் மனைவி சர்மிளா சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போது அசூர் அருகே சாத்தங்குடியில் பாலாஜி கொலை செய்யப்பட்டு கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, கும்பகோணம் தாலுகா போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், அபிஷேக், பிரவின் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


















