நல்லமநாயக்கன்பட்டியில் இன்று மின் தடை
ராஜபாளையம் அருகேயுள்ள நல்லமநாயக்கன்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை (டிச.10) மின்தடை அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள நல்லமநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: சோழபுரம், தேசிகாபுரம், ஆவரந்தை, நல்லமநாயக்கன்பட்டி, கிழவிகுளம், சங்கரலிங்கபுரம், செந்தட்டியாபுரம், வாழவந்தாள்புரம், அண்ணாநகா், முதுகுடி, ஜமீன்கொல்லங்கொண்டான், இளந்திரை கொண்டான் ஆகிய பகுதிகள்.