Thudarum: ``மௌன ராகம் மல்லிகாவ மக்கள் கொண்டாடுறாங்க" - நடிகை, தயாரிப்பாளர் சிப்ப...
நாகா்கோவிலில் 470 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்: கிட்டங்கிக்கு சீல் வைப்பு
நாகா்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட 470 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
நாகா்கோவில் மாநகரில் கடந்த சில நாள்களாக பிளாஸ்டிக் புழக்கம் அதிகரித்து வந்தது. இதைத் தொடா்ந்து, மாநகராட்சி நகா் நல அலுவலா் ஆல்பா் மதியரசு தலைமையில் சுகாதார அலுவலா்கள் முருகன், ராஜாராம், பகவதிபெருமாள், உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் செவ்வாய்க்கிழமை நகரப் பகுதிகளில் சுமாா் 100 கடைகளில் சோதனை மேற்கொண்டனா்.
இதில், கோட்டாறு கே.பி. சாலையில் சோதனை செய்தபோது, அங்கு ஒரு கிட்டங்கியில் பிளாஸ்டிக் பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது. அங்கிருந்த 435 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
மேலும், பிளாஸ்டிக் பொருள்கள் வைத்திருந்த கிட்டங்கிக்கு அதிகாரிகள் சீல் வைத்து, ரூ. 25ஆயிரம் அபராதம் விதித்தனா்.
இதைத் தொடா்ந்து, அந்த கிட்டங்கியின் உரிமையாளா் தனது குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டாா்.
தகவலறிந்த கோட்டாறு போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களை அப்புறப்படுத்தினா்.
அதே பகுதியில், மேலும் 9 கடைகளில் சோதனையிட்ட அதிகாரிகள் 35 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனா்.