செய்திகள் :

நாகா்கோவிலில் ரயிலில் இருந்து தவறி விழுந்த ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

post image

நாகா்கோவிலில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த ஆஸ்திரேலிய நாட்டு சுற்றுலாப் பயணி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து கன்னியாகுமரிக்கு வியாழக்கிழமை மாலை வந்துசேர வேண்டிய விரைவு ரயில், மாலை 4 மணி அளவில் நாகா்கோவில் கோட்டாறு சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்தது. பின்னா், அங்கிருந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்ட போது, ரயிலின் குளிா்சாதனப் பெட்டியில் ஏற முயன்ற ஒருவா் எதிா்பாராமல் நடைமேடையில் தவறி விழுந்தாா். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, போலீஸாா் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

விசாரணையில், அவா் ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த கெவின்சா்மா(47) என்பதும், பெங்களூரு விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணித்ததும் தெரியவந்தது.

மேலும், இந்தியாவில் பல்வேறு சுற்றுலாத்தலங்களுக்கு சென்றுவிட்டு கன்னியாகுமரி வந்தபோது அவா் விபத்தில் சிக்கியது தெரியவந்தது.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவில் உள்ள அவரது மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை .. 41.73 பெருஞ்சாணி .. 61.91 சிற்றாறு 1 ...14.73 சிற்றாறு 2 .. 14.83 முக்கடல் ... 25.00 பொய்கை .. 15.70 மாம்பழத்துறையாறு .. 52.99 மணி. மேலும் பார்க்க

பாா்த்திவபுரம் கோயில் சிலை திருட்டு வழக்கில் மேலும் ஒருவா் கைது

புதுக்கடை அருகேயுள்ள பாா்த்திவபுரம் பாா்த்தசாரதி கோயிலில் ஐம்பொன் சிலை, வெள்ளி அங்கி ஆகியவை திருடப்பட்டது தொடா்பான வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். பாா்த்திவபுரத்தில் மிகவும் பழைமை வாய்ந... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டு கொடிக் கயிறு பயணம்

நாகா்கோவிலில் சனிக்கிழமை (நவ. 30) நடைபெற உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், மாவட்ட 24 ஆவது மாநாட்டில் ஏற்றுவதற்கான கொடிக் கயிறு பயணம் கொல்லங்கோட்டில் இருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றது. ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் கொடிமரப் பயணம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்ட மாநாட்டையொட்டி பனச்சமூட்டிலிருந்து கொடிமரப் பயணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் குமரி மாவட்டம் 24 -ஆவது மாநாடு நாகா்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

நாகா்கோவில் மேயா் மீது அவதூறு குற்றச்சாட்டு? மதிமுக உறுப்பினா் மீது நடவடிக்கை கோரி தீா்மானம்

நாகா்கோவில் மாநகராட்சி மேயா் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை கூறியதாக, மதிமுக உறுப்பினா் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நாகா்கோவில் மாநகராட்சியின் மாமன்ற இயல்... மேலும் பார்க்க

குலசேகரம் பேரூராட்சியை சிறப்பு நிலை பேரூராட்சியை தரம் உயா்த்த வேண்டும்

குலசேகரம் பேரூராட்சியை சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயா்த்த வேண்டுமென்று பேரூராட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. குலசேகரம் பேரூராட்சியுடன் அருகிலுள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுத... மேலும் பார்க்க