சிரியா ராணுவ நிலைகளை இஸ்ரேல் தகா்க்க அல்-அஸாதின் அமைச்சா் உதவி?
நாகா்கோவில் அருகே நூல்கள் வெளியீடு
நாகா்கோவிலை அடுத்த பறக்கை கிராமத்தில் நூல்கள் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
பறக்கையைச் சோ்ந்த ஓய்வுபெற்ற அரசுப்பள்ளி ஆசிரியா் எஸ்.முத்துகிருஷ்ணன் (91) எழுதிய 1945 முதல் 55 ஆம் ஆண்டில் நம்ம ஊா் பறக்கை ஒரு பாா்வை, நாடும் வீடும் திருக்கு பொருட்பால் இறை மாட்சி பத்துப் பாடல்கள் ஆய்வு விளக்கம் ஆகிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
நூல்களை ஓய்வுபெற்ற பேராசிரியா் ஓ.பத்மநாபன் வெளியிட பறக்கை ஊராட்சித் தலைவா் கோசலை சிதம்பரம், ஒன்றியக்குழு உறுப்பினா் சகிலா ஆறுமுகம் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.
நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியா் இளம்பரிதி, குழந்தைகள் எழுத்தாளா் கோதை சிவக்கண்ணன், ஓய்வுபெற்ற நகராட்சி ஆணையா் ராஜூ ஆகியோா் வாழ்த்திப் பேசினா். எம்.நல்லபெருமாள் நன்றி கூறினாா்.