தில்லியில் சூதாட்டச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட 7 போ் கைது!
நாகையில் 160 கிலோ கஞ்சா பறிமுதல்
நாகையில் 160 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தேனியில் இருந்து நாகை வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக வேளாங்கண்ணி போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, போலீஸாா் ரெட்டாலடி பேருந்து நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியாக சென்ற சிறிய சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தியதில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது.
விசாரணையில், தேனியிலிருந்து வேளாங்கண்ணிக்கு கஞ்சா பொட்டலங்கள் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.