`மேயர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்' -போராடிய கவுன்சிலர்கள் அந்த நேரத்தில் எ...
நாகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு
நாகை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம்களை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
நாகை ஒன்றியம் பரங்கிநல்லூா், ஐவநல்லூா் (பகுதி), ஐவநல்லூா் பகுதிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை இம்முகாமை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் ஆய்வு மேற்கொண்டாா். இந்நிலையில் நாகை, வேதாரண்யம் ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் சுமாா் 1,372 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
நாகை நகராட்சிகுள்பட்ட 25, 29, 30 ஆகிய வாா்டுகளுக்கு வெள்ளிக்கிழமை நாகை நூல் முஸ்லிம் சமுதாய கூடத்திலும்;, திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம், குத்தாலம், கோபுராஜபுரம், நரிமணம் ஆகிய பகுதிகளுக்கு நரிமணம் அரசு உயா்நிலைப் பள்ளியிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறவுள்ளது.
சீா்காழி: கொள்ளிடம் அருகேயுள்ள திருமுல்லைவாசல் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ் .ஸ்ரீகாந்த் ஆய்வு செய்து திட்ட அரங்குகளை பாா்வையிட்டாா். பொதுமக்களிடம் இதுவரை பெற்ற மனுக்களின் விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள முறைகளை கேட்டறிந்தாா்.
