செய்திகள் :

நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் குற்றவாளிகள்: மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு!

post image

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் குற்றவாளிகள் என்றும் அவர்கள் மீது அனுதாபம் காட்டக்கூடாது என்றும் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் பேசியது சர்ச்சையாகியுள்ளது.

ஹரியானா முன்னாள் முதல்வரும் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சருமான மனோகர் லால் கட்டார் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களை விமர்சித்துப் பேசியுள்ளார்.

நாடுகடத்தப்பட்ட மக்கள் மனிதாபிமானமின்றி நடத்தப்பட்டது குறித்து செய்தியாளர்கள் அமைச்சர் கட்டாரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ”ஒரு நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைபவர்கள் குற்றவாளிகள். அவர்கள் மீது அனுதாபம் காட்டக்கூடாது. இதற்கு எதிராக அறிவுறுத்தல்கள் செய்யப்பட்டாலும் நமது மக்கள் மீண்டும் அதே தவறை செய்கின்றனர். இது போதைப் பழக்கத்தைப் போன்று தவறானது. நாம் ஏன் அவர்கள் மீது அனுதாபம் காட்டவேண்டும்?” என்றார்.

மேலும், “அவர்கள் எவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டால் என்ன? அவர்களுக்கு எவ்வாறு மறுவாழ்வு அளிப்பது என்பதே எங்களின் கவலை” என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளியைக் கண்டுபிடிப்பவருக்கு ரூ. 1 லட்சம்!

அமெரிக்காவின் ராணுவ விமானங்களில் நாடு கடத்தப்பட்ட 333 இந்தியர்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டு அனுப்பப்பட்டனர். அவர்களை அமெரிக்கா அவமதித்ததற்கு மத்திய பாஜக அரசு கண்டனம் தெரிவிக்காததைத் தொடர்ந்து நாடு முழுவதும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், மத்திய அமைச்சரின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மேலும் பேசிய கட்டார், “ஹரியானாவின் கர்னாலில் உள்ள டாப்ரி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குச் சென்றனர். கடந்தாண்டு மக்களைவைத் தேர்தலின்போது அந்த கிராமத்திற்குச் சென்றேன். அந்த கிராமத்தில் ஒரே ஒரு நபர் மட்டுமே அரசு ஊழியர் என்பது அதிர்ச்சியளித்தது.

இவ்வாறு வெளிநாடு செல்பவர்கள் திரும்பி வருவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதுபோன்று பயணம் செய்வது ஆபத்தானது” என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க | கும்பமேளாவில் இரட்டிப்பு லாபம் கண்ட நிறுவனங்கள்!

நாடு கடத்தப்பட்டவர்களிள் 113 பேர் ஹரியானாவின் அம்பாலா, குருக்ஷேத்ரா, கர்னல், கைதல், ஹிசார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் பயண முகவர்களுக்கு ரூ.40 லட்சம் முதல் ரூ. 70 லட்சம் வரை பணம் செலுத்தியுள்ளனர். மேலும், குருக்ஷேத்ராவைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் அமெரிக்கா செல்ல ரூ.1.20 கோடி வரை செலுத்தியுள்ளனர்.

ஹரியானா காவல்துறை பயண முகவர்கள் மீது மாநிலம் முழுவதும் சுமார் 20 குற்ற வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. சில குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு: ராகுல் காந்திக்கு ரயில்வே அமைச்சர் கேள்வி!

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு விவகாரம் பர... மேலும் பார்க்க

கோவாவில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவுக்கு இட்லிதான் காரணம்: பாஜக எம்.எல்.ஏ. கருத்தால் சர்ச்சை

கோவாவில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவுக்கு இட்லியே காரணம் என்று பாஜக எம்.எல்.ஏ. பேசியிருப்பது சமூக ஊடகங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கோவாவில் சமீபகாலமாக சர்வதேச சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து ... மேலும் பார்க்க

பிரதமரின் திட்டத்தால் ஏழைகளின் பைகள் காலியாகிறது: கார்கே

விக்ஸித் பாரத் திட்டத்தால் இந்திய ஏழைகள் பணமின்றி தவிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.காங்கிரஸ் மூத்தத் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, தனது எக்ஸ் பக்கப் பதிவில் கூறியதாவது ``பிரத... மேலும் பார்க்க

கும்பமேளாவை பயன்படுத்திக்கொண்ட நிறுவனங்கள்!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று முடிந்துள்ளது. இதில் 66 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன. 13 முதல் பிப். 26 ஆம் தேதி வரை 45 நாள்கள... மேலும் பார்க்க

இந்தியக் குடும்பங்களின் நிகர சேமிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

இந்தியக் குடும்பங்களின் நிகர சேமிப்பு 50 ஆண்டுகால வரலாறு காணாத வீழ்ச்சியடைந்ததாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.இந்தியாவின் 140 கோடி மக்கள்தொகையில் சுமார் 100 கோடி பேர், அத்தியாவசிய செலவுகளைத் தவிர மற்றவைக்... மேலும் பார்க்க

பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளியைக் கண்டுபிடிப்பவருக்கு 1 லட்சம்!

பேருந்தில் பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, குற்றவாளியின் புகைப்படம் வெளியான நிலையில், அந்நபர் குறித்து தகவல் கொடுப்பவருக்கு 1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று புணே காவல் துறை தெ... மேலும் பார்க்க