செய்திகள் :

நான் தலைமறைவாக இல்லை; காவல்துறைக்கு ஏன் இவ்வளவு அவசரம்? - சீமான் பேட்டி

post image

நான் தலைமறைவாக இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

ஓசூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

'நான் எங்கும் தலைமறைவாக இல்லை. நான் பயந்து எங்கும் ஓடிவிட மாட்டேன்.

நான் இன்று தருமபுரி செல்கிறேன், ஒருநாள் காவல் நிலையத்திற்கு வருகிறேன் என்று கூறிய பிறகும் என்னை ஏன் விரட்டுகின்றனர்?

நான் ஆஜராவேன் என்று உறுதியளித்த பிறகும் என் வீட்டில் சம்மன் ஒட்டியது ஏன்?

வழக்கில் என்னை மீண்டும் மீண்டும் விசாரித்து அசிங்கப்படுத்தவே முயற்சி நடக்கிறது. பெரியார் பற்றி நான் பேசியதால் பெண்ணை வைத்து என்னை அடக்க முயற்சி செய்கிறார்கள்.

காவல்துறைக்கு ஏன் இவ்வளவு அவசரம்? அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் இந்த அவசரத்தை காட்ட வேண்டும்' என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க | சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிப்பு! துப்பாக்கியுடன் மிரட்டிய காவலாளி கைது!

முன்னதாக, நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் சம்மன் அனுப்பியபடி சீமான் இன்று ஆஜராகாத நிலையில் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் காவல்துறையினர் சம்மன் ஒட்டினர். நாளை(வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு சீமான் ஆஜராக வேண்டும் என்று சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அப்போது காவலாளி, நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளரை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்ததுடன் துப்பாக்கியை நீட்டி மிரட்டியதால் அவரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.

காவல்துறையினரை தாக்க முற்பட்டதாகவும் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாகவும் போலீசார் புகார் கூறியுள்ளனர்.

அதேநேரத்தில் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை சில நிமிடங்களிலேயே கிழித்த சீமானின் உதவியாளரையும் கைது செய்தனர்.

இதன்பின்னர் சீமானின் மனைவி கயல்விழி, காவல் நிலைய ஆய்வாளரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

கொளத்தூரில் பெரியார் மருத்துவமனை: முதல்வர் திறந்து வைத்தார்!

சென்னை கொளத்தூர், பெரியார் நகரில் அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் ரூ. 210 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(பிப். 27) திறந்து வைத்தார்.இப்புதிய மர... மேலும் பார்க்க

பெருநகர சென்னையின் கடன்தொகை ரூ. 3,065.65 கோடி: மேயர் பிரியா

பெருநகர சென்னையின் கடனுக்காக வட்டி மட்டும் ரூ. 8.5 கோடி செலுத்தப்பட்டு வருவதாக மேயர் பிரியா தெரிவித்தார்.சென்னை பெருநகர மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் சென்னை ரிப்பன் மாளிகையில்... மேலும் பார்க்க

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அதிமுக நிர்வாகி ஆஜர்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணைக்கு கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி சங்கர் ஆஜரானார்.நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக... மேலும் பார்க்க

கன்னியாகுமரி உள்பட 10 மாவட்டங்களில் நாளை கனமழை!

தமிழகத்தில் நாளை (பிப். 28)ல் பத்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிப்.28 (நாளை) கடலோர தமிழகத்தில் அநேக இடங்க... மேலும் பார்க்க

சிவராத்திரி: கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட 92 வயது மூதாட்டி!

ஶ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு தொடர்ந்து 63வது ஆண்டாக முத்தம்மாள்(92)என்ற மூதாட்டி கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்டு, பக்தர்களுக்க... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையத்தில் மலிவு விலை கஃபே! டீ ரூ.10, சமோசா, வடை ரூ. 20!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மலிவு விலை கஃபேவை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு திறந்துவைத்தார்.நாடு முழுவதும் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் உணவகங்களை திறக்க வேண்டும... மேலும் பார்க்க