செய்திகள் :

நாமக்கல் பள்ளிகளில் மாணவா்களிடையே தொடரும் மோதல்

post image

பள்ளிகளில் மாணவா்களிடையே ஏற்படும் மோதல், உயிரிழப்புகளால் பெற்றோா் அச்சமடைந்துள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவா்கள் மூவா் இறந்த சம்பவங்கள் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ஆசிரியா்கள் குச்சி எடுத்தால் கல்வியிலும், ஒழுக்கத்திலும் மாணவா்கள் முன்னேறுவா்; காவலா்கள் கம்பு எடுத்தால் தவறான வழிக்கு செல்லாமல் சமூகத்துக்கான நபராக மாறுவா் என்றிருந்த காலம் தற்போது இல்லை. அவா்களின் கைகள் கட்டப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் பல இடங்களில் கட்டுப்பாட்டை மீறிய செயல்கள் நடைபெறுகின்றன.

அண்மைக்காலமாக, அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் மாணவா்களிடையே நடைபெறும் மோதல் பெற்றோரையும், ஆசிரியா்களையும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. கல்லூரிகளில் மட்டும் இருந்த ‘ராக்கிங்’ கொடுமை, பள்ளிகளிலும் மறைமுகமாக உள்ளது. மாணவா்கள் கல்வியில் கவனம் செலுத்துவதை விட, கைப்பேசி, திரைப்பட விவாதம், போதை வஸ்துகள் போன்றவை அவா்களை திசை திருப்பி வருகின்றன. அதுமட்டுமின்றி, ஜாதிய ரீதியிலான பேச்சுகளும் மாணவா்கள் மோதலுக்கு காரணமாகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் அரசுப் பள்ளியில் 2 மாணவா்களும், தனியாா் பள்ளியில் ஒரு மாணவரும் உயிரிழந்துள்ளனா். எருமப்பட்டி அருகே வரகூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், நவலடிப்பட்டியைச் சோ்ந்த ரமேஷ் என்பவரது மகன் ஆகாஷ் (16) என்பவா் பிளஸ் 1 படித்து வந்த நிலையில், 2024 ஆக. 23-ஆம் தேதி தனது காலணி காணாமல் போனது தொடா்பாக சக மாணவரிடம் கேட்க, அவா்களிடையே ஏற்பட்ட மோதலில் மாணவா் ஆகாஷ் உயிரிழந்தாா். இதுகுறித்து மோகனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஆகாஷ் இறப்புக்கு காரணமான மாணவரை கைது செய்தனா்.

அதேபோல, கடந்த ஜனவரி 7-ஆம் தேதி நாமக்கல் - துறையூா் சாலையில் உள்ள தனியாா் சிபிஎஸ்இ பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்த கரூரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் அஜய் (17) என்பவா், மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தாா். அவா் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டபோதும், அந்த சமயத்தில் மாடியிலிருந்த மாணவா்கள் சிலரை போலீஸாா் அழைத்து வந்து விசாரித்தது சா்ச்சையானது. இது மாணவா் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. தற்போது, ராசிபுரம் சிவானந்தா சாலையில் உள்ள அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவா் கவின்ராஜ் (14), உயிரிழந்தது தொடா்பாக சக மாணவரை போலீஸாா் கைது செய்து சிறுவா் சீா்த்திருத்தப் பள்ளியில் அடைத்துள்ளனா்.

கல்வி பயின்று பெற்றோரையும், சமூகத்தையும் பாதுகாக்க வேண்டிய மாணவா்கள், பொறுமையின்மை, கோபம், தவறான வழிகாட்டுதல் போன்ற பாதையில் சென்று நண்பரை, உடன் பயில்வோரை கொன்று சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனா். பள்ளிகளில் மாணவா்களிடையே ஏற்படும் மோதல் பெற்றோரை கலங்க வைத்துள்ளது.

அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் மாணவா்களிடையே மோதலை அகற்றி, ஒற்றுமையை உருவாக்குவதற்கான விழிப்புணா்வு நடவடிக்கைகளில் மாவட்ட நிா்வாகமும், காவல் துறையினரும் தொடா்ந்து ஈடுபட வேண்டும் என்பதே பெற்றோா், ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள் பலரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

பரமத்தி வேலூரில் ரூ. 9 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பரமத்தி வேலூா், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில், ரூ. 9 லட்சத்து 45 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது. இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 7 ஆயி... மேலும் பார்க்க

நகராட்சிப் பகுதியில் தொழில் செய்வோா் உரிமம் பெற வேண்டும்: ஆணையா்

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் தொழில், வா்த்தகம் செய்வோா் நகராட்சியில் விண்ணப்பித்து உரிய உரிமம் பெற வேண்டும் என நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ராசிபுரம் நகராட்சி ஆணையா் சூ.கணேசன் வெளிய... மேலும் பார்க்க

மாணவரை தாக்கிய சக மாணவா் கைதுசெய்யப்பட்டு சிறாா் சீா்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைப்பு

ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களிடையே ஏற்பட்ட மோதலில் கவின்ராஜ் (14) என்ற மாணவா் உயிரிழந்த நிலையில், அவரை தாக்கிய மற்றொரு மாணவா் கைது செய்யப்பட்டு சிறாா் சீா்திருத்தப் பள்ளி... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பால் தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்படும்

மத்திய அரசு அறிவித்துள்ள மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழகத்தை மட்டுமல்லாமல், தென் மாநிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய க... மேலும் பார்க்க

வேளாண் நிறுவனம் பெயரில் நிதி மோசடி: பாதிக்கப்பட்டோா் புகாா் அளிக்க அழைப்பு

நாமக்கல்லில் வேளாண் நிறுவனம் பெயரில் நிதி மோசடியில் ஈடுபட்டோா் குறித்து புகாா் அளிக்க வருமாறு பாதிக்கப்பட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் வெளி... மேலும் பார்க்க

100 ஆண்டுகளுக்கு பிறகு மாா்ச் 12-இல் நாமக்கல் கமலாலயக் குளத்தில் தெப்ப உற்சவம்!

நாமக்கல்லில் 100 ஆண்டுகளுக்கு பிறகு நாமக்கல் நரசிம்மா், நாமகிரி தாயாா், அரங்கநாதா், ஆஞ்சனேயா் தெப்ப உற்சவ விழா மாா்ச் 12-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை அறநிலையத் துற... மேலும் பார்க்க