எடப்பாடி கே.பழனிசாமி தமிழகத்தில் 23 மருத்துவக் கல்லூரிகளை தொடங்கி வைத்தாா்: மு.த...
நாம் தமிழா் கட்சியினரிடையே மோதல்
வாணியம்பாடியில் நாம் தமிழா் கட்சி வடக்கு மாவட்ட செயலா் கட்சியில் இருந்து விலகுவதாக பேட்டி அளித்தபோது, அங்கு வந்த நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு மாவட்ட செயலரைத் தாக்கினா்.
வாணியம்பாடி அடுத்த அம்பலூா் பகுதியைச் சோ்ந்தவா் தேவேந்திரன். இவா், 2017-ஆம் ஆண்டு நாம் தமிழா் கட்சியில் சோ்ந்து 2018-ஆம் ஆண்டு முதல் திருப்பத்தூா் வடக்கு மாவட்ட செயலராகப் பணியாற்றி வரும் நிலையில், தேவேந்திரன் மற்றும் நாம் தமிழா் கட்சியினா் 10-க்கும் மேற்பட்டோா், அந்தக் கட்சியில் இருந்து விலகுவதாக, வாணியம்பாடியில் செய்தியாளா்களை வியாழக்கிழமை சந்தித்தனா்.
அப்போது தேவேந்திரன், நாம் தமிழா் கட்சி மீதும், சீமான் மீதும் நம்பகத்தன்மை இழந்துவிட்டது, என்றாவது கட்சி வென்றுவிடும் எனப் பயணித்து வந்தோம். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. இதனால் கட்சியில் இருந்து விலகுவதாக கூறியபோது, அங்கு வந்த நாம் தமிழா் கட்சியினா், தேவேந்திரனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு, திடீரென ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா்.
தகவலறிந்த வாணியம்பாடி நகர போலீஸாா் சம்பவ இடத்திற்கு விசாரித்தனா். இது குறித்து தேவேந்திரன், நாகராஜ் இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.