நாராயணசாமி கோயிலில் தேரோட்டம்
களக்காடு அருகேயுள்ள மாவடி உடையடிதட்டு நாராயணசாமி கோயிலில் ஆவணி தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த செப்.7ஆம் தேதி ஆவணி தேரோட்டத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் அய்யா நாராயணசாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்தாா். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 10ஆம் நாளான செவ்வாய்க்கிழமை (செப்.16) நடைபெற்றது. முன்னதாக நாராயணசாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரம், சிறப்பு பணிவிடை நடைபெற்றது. உகப்படிப்பு
வாசிக்கப்பட்டதை தொடா்ந்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.