நாளை(டிச. 12) மத்திய அமைச்சரவைக் கூட்டம்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை(டிச. 12) நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ. 25 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், அதானி மீதான அமெரிக்க நீதித்துறையின் லஞ்ச குற்றச்சாட்டு குறித்து அவையில் விவாதிக்கவும் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரியும் எதிர்க்கட்சிகள் முழக்கமிடுவதால் அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.
அதேபோன்று, அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற வளாகத்திலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | கர்நாடக எழுத்தாளருக்கு வைக்கம் விருது அறிவிப்பு!
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை (டிச. 12, வியாழக்கிழமை) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. தலைநகர் தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிற்பகல் 1 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அரசின் சில முக்கியத் திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | ராகுல் கொடுத்த தேசியக் கொடியை வாங்க மறுத்த ராஜ்நாத் சிங்!