செய்திகள் :

நாளை பதவியேற்பு; அமைச்சர்கள் இலாகா தொடர்பாக மகா., முதல்வர் பட்னாவிஸை இரவில் சந்தித்து பேசிய ஷிண்டே!

post image

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு புதிய முதல்வர் பதவியேற்பு மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டது. புதிய முதல்வர் கடந்த 5-ம் தேதி பதவியேற்று 10 நாள்கள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனக்கு உள்துறை இலாகா வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் அதனை கொடுக்க முடியாது என்று பா.ஜ.க கூறிக்கொண்டிருக்கிறது. இதனால் இலாகா மற்றும் அமைச்சர்கள் தொடர்பாக பா.ஜ.கவுடன் ஏக்நாத் ஷிண்டே பேசுவதை தவிர்த்து வந்தார். பா.ஜ.க தலைவர்கள் ஏக்நாத் ஷிண்டேயை நேரில் சந்தித்து இது குறித்து பேசினர். வரும் 16ம் தேதி மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் குளிர்காலக்கூட்டத்தொடர் தொடங்குகிறது.

எனவே அதற்குள் அமைச்சர்கள் பதவியேற்றாக வேண்டும். எனவே நாளை புதிய அமைச்சர்கள் பதவியேற்க இருக்கின்றனர். அதுவும் பதவியேற்பு விழா நாக்பூரில் நடைபெறுகிறது. நாக்பூரில் சட்டமன்றத்தின் குளிர்காலக்கூட்டத்தொடர் நடைபெறுகிறது. எனவே அமைச்சர்கள் பதவியேற்றவுடன் அங்கேயே சட்டமன்றக் கூட்டத்தில் பங்கேற்க வசதியாக இருக்கும் என்று கருதி அமைச்சர்கள் நாக்பூரில் பதவியேற்கின்றனர். நாக்பூரில் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்துவிட்டு அங்கேயே தங்கி இருந்து மறுநாள் அதாவது திங்கள்கிழமை கூடும் சட்டமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உரையாற்றுகிறார்.

அமைச்சர்கள் மற்றும் இலாகாக்கள் தொடர்பாக நேற்று இரவு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை அவரது இல்லத்தில் சந்தித்து நீண்ட நேரம் பேசினார். இந்த சந்திப்பின் போது இரு கட்சிகளிடையே அமைச்சர் பதவி மற்றும் இலாகா குறித்த கருத்து வேறுபாடுகளை பேசித் தீர்த்துக்கொண்டனர். எனவே திட்டமிட்டபடி நாளை அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆரம்பத்தில் தனது கட்சியில் ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்த அனைவருக்கும் அமைச்சர் பதவி கொடுக்கவேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே பிடிவாதம் பிடித்தார். ஆனால் கடந்த முறை அமைச்சர்களாக இருந்து சரியாக செயல்படாத அமைச்சர்களுக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்க முடியாது என்று பா.ஜ.க கூறிவிட்டது. எனவே சஞ்சய் ரத்தோட், தீபக் கேசர்கர், தானாஜி சாவந்த், அப்துல் சத்தார் உட்பட 6 அமைச்சர்களை நீக்கிவிட்டு அவர்களுக்கு பதில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்துள்ள ஏக்நாத் ஷிண்டே அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பதற்காக புதிய திட்டத்தை கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளார். அதன்படி அமைச்சர்களுக்கு 2.5 ஆண்டுகள் மட்டும் பதவி வழங்க ஏக்நாத் ஷிண்டே முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சுழற்சி முறையில் அமைச்சர் பதவி வழங்க பா.ஜ.கவும் சம்மதம் தெரிவித்துள்ளதாக அக்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதோடு பா.ஜ.கவும் இந்த சுழற்சி முறையை பின்பற்ற முடிவு செய்துள்ளது. புதிய அமைச்சரவையில் பா.ஜ.கவை சேர்ந்த 21 அமைச்சர்களும், சிவசேனாவை சேர்ந்த 12 பேரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 பேரும் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்று பா.ஜ.க தலைவர்கள் தெரிவித்துள்ளனர். துணை முதல்வர் அஜித் பவாருக்கு நிதித்துறை கொடுக்கப்படுவது மற்றொரு துணை முதல்வரான ஏக்நாத் ஷிண்டேயிக்கு பிடிக்கவில்லை. தங்களது கட்சிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியை விட அதிக எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் கூட தங்களுக்கு நிதித்துறை அல்லது உள்துறை ஒதுக்கப்படவில்லை என்று ஏக்நாத் ஷிண்டே முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் தனது வருத்ததை தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் சுகாதாரம், பொதுப்பணித்துறை, நகர்ப்புற மேம்பாடு போன்ற துறைகள் சிவசேனாவிற்கு கொடுக்கப்படும் என்று பா.ஜ.க தெரிவித்துள்ளது.

EVKS: பெரியாரின் பேரன் டு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் - இளங்கோவனின் அரசியல் பயணம் ஒரு பார்வை!

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ-வும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (75) உடல்நலக்குறைவால் காலமானார்.அவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்ப... மேலும் பார்க்க

`அனைவரையும் அரவணைத்துக் கொள்ளும் மனம் படைத்தவர்' - EVKS-க்கு இரங்கல் தெரிவிக்கும் அரசியல்வாதிகள்

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.-வும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (75) உடல்நலக் குறைவால் காலமானார். அவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.அந்... மேலும் பார்க்க

EVKS Elangovan: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காலமானார்!

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.-வும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (75) உடல்நலக்குறைவால் காலமானார்ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த... மேலும் பார்க்க

வயநாடு நிலச்சரிவு: `ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணி' - கேரள அரசிடம் ரூ.132 கோடி கேட்கும் மத்திய அரசு!

கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் சூரல்மல, முண்டக்கை பகுதிகளில் கடந்த ஜூலை மாதம் இறுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். பலர் காயமடைந்தனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீ... மேலும் பார்க்க