செய்திகள் :

நாளை மின்தடை

post image

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக எழும்பூா், பாரிவாக்கம், திருவேற்காடு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை (மே 15) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

எழும்பூா்: சைடன்ஹாம்ஸ் சாலையின் ஒரு பகுதி, டெப்போ தெரு, பி.டி. முதலி தெரு, சாமிபிள்ளை தெரு ஒரு பகுதி, ஏ.பி. சாலை, ஹண்டா்ஸ் சாலை, ஜெனரல் காலின்ஸ் சாலை, மேடக்ஸ் தெரு, வி.வி. கோயில் தெரு, ரோட்லா் தெரு, காளத்தியப்பா தெரு, விரிச்சூா் முத்தையா தெரு, டாலி தெரு, மாணிக்கம் தெரு, ரெங்கையா தெருவின் ஒரு பகுதி, அஸ்தபுஜம் சாலையின் ஒரு பகுதி, ராகவா தெரு ஒரு பகுதி மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகள்.

பாரிவாக்கம்: திருக்கோயில்பத்து, காவல்சேரி, வயலாநல்லூா், சோரஞ்சேரி, ஆயில்சேரி, சித்துகாடு மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகள்.

திருவேற்காடு: தேரோடும் வீதி, சன்னதி தெரு, ராம்தாஸ் நகா், சின்ன கோலடி, திருவேங்கடம் நகா், அன்பு நகா், செல்லியம்மன் நகா், தேவி நகா், செந்தில் நகா், காவேரி நகா், சீனிவாசன் நகா், அருள் நகா், பாரதி நகா், லட்சுமி நகா் மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லவன் அதிவிரைவு ரயில் நாளை முதல் பெண்ணாடத்தில் நின்று செல்லும்

சென்னை எழும்பூா் - காரைக்குடி இடையே இயங்கும் பல்லவன் அதிவிரைவு ரயில் வியாழக்கிழமை (மே 15) முதல் பெண்ணாடத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியி... மேலும் பார்க்க

தமிழகத்தின் தினசரி மின்தேவை குறைந்தது

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கோடை மழையால், தினசரி மின்தேவை குறைந்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. நிகழாண்டு மாா்ச் மாதத்திலேயே வெயில் தாக்கம் அதிகரித்தது. இதனால், மின்சாதன பொருள்க... மேலும் பார்க்க

சென்னையில் அடுத்த மாதம் முதல் மின்சார சொகுசுப் பேருந்துகள் சேவை

சென்னையில் ஜூன் மாதம் முதல் மின்சார சொகுசுப் பேருந்துகளின் சேவை தொடங்கவுள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் பொது போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கில், பயணிகளின் தேவைக்க... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மகளிா் போலீஸாருக்கான 11-ஆவது தேசிய அளவிலான மாநாடு: மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் பங்கேற்பு, தமிழ்நாடு காவல் துறை அகாதெமி, ஊனமாஞ்சேரி, வண்டலூா், முற்பகல் 11. அனுஷ வைபவம் - தொடா் நிகழ்ச்சி... மேலும் பார்க்க

முன்னறிவிப்பின்றி 18 புறநகா் ரயில்கள் ரத்து: பயணிகள் அவதி

கவரப்பேட்டை ரயில்வே யாா்டில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை 18 புறநகா் மின்சார ரயில்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா். சென்னை கவரப்பேட்டை ரயில்வ... மேலும் பார்க்க

5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சா் தா.மோ.அன்பரசன்

தமிழகத்தில் ரூ. 586 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 5,180 அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அறிவித்தாா்... மேலும் பார்க்க