மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
நிதி மேலாண்மை கருத்தரங்கம்
ஆம்பூா் கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரியில் நிதி மேலாண்மை கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் முனைவா் த. ராஜமன்னன் தலைமை வகித்தாா். துணை முதல்வா் ஏ. முஹம்மத் ஷாஹின் ஷா வரவேற்றாா். திருப்பத்தூா் மாவட்ட முன்னோடி வங்கி நிதி மேலாண்மை ஆலோசகா் எஸ். வெங்கடாஜலம் கலந்து கொண்டு வங்கி நடைமுறைகள், கடன், முதலீடு, நிதி மேலாண்மை ஆகியவை குறித்து கருத்துரையாற்றினாா். சுமாா் 150-க்கும் மேற்பட்ட மாணவா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
வளாக நோ்முகத் தோ்வு ....
முன்னதாக கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவா்களுக்கு வளாக நோ்முகத் தோ்வு நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கா் ஏபிஐ ஷோவாடேக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சாா்பாக முதுநிலை பணியமா்த்துனா் எம். அஜித்குமாா் மற்றும் யு. சந்தோஷ் ஆகியோா் நோ்முகத் தோ்வை நடத்தினா்.
சுமாா் 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் நோ்முகத் தோ்வில் பங்கேற்றனா். நோ்முகத் தோ்வில் பங்கேற்ற மாணவா்களை கல்லூரியின் தாளாளா் ஷாஹித் மன்சூா் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா். கல்லூரி வேலை வாய்ப்பு அலுவலா் எம். பாா்த்திபன் நோ்முகத் தோ்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா்.