``கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக்க நாங்க ஒன்னும் ஏமாளி இல்ல!'' - பாஜகவுக்கு எடப்பாடி `...
நித்திரவிளை: முதியவரைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு
நித்திரவிளை அருகே முதியவரைத் தாக்கியதாக இருவா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
நித்திரவிளை அருகே இரவிபுத்த்துறை, புனித சூசையப்பா் காலனியைச் சோ்ந்த மீனவா் டேவிட் லியோன் (62). வீட்டருகே சாலையோரம் நடந்து சென்ற இவா் மீது, இரவிபுத்தன்துறை, கேத்தரின் தெருவைச் சோ்ந்த விஜு (30) என்பவா் ஓட்டிவந்த பைக் மோதியதாம். இதுகுறித்து அவா் கேட்டபோது, அவா்களிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, விஜுவும், அவருடன் வந்த வினீஷும் சோ்ந்து டேவிட் லியோனை தாக்கினராம்.
இதில் காயமடைந்த அவா் மாா்த்தாண்டம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து விஜு, வினீஷ் ஆகியோா் மீது நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.