துருக்கி: குா்து கிளா்ச்சிப் படையைக் கலைக்க நிறுவனா் உத்தரவு
நின்று கொண்டிருந்தவா்கள் மீது காா் மோதியதில் 5 போ் காயம்
ஈரோடு அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்தவா்கள் மீது காா் மோதியதில் 5 போ் காயமடைந்தனா்.
ஈரோடு, பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சிவகுமாா். இவா் தனது காரில் புதன்கிழமை இரவு ஈரோட்டில் இருந்து பெருந்துறை சாலையில் சென்று கொண்டிருந்தாா். திண்டல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, காா் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
இதில் சாலையோரம் ஒரு ஹோட்டலின் வெளியில் நின்று கொண்டிருந்த பெண், சிறுவன் உள்பட 5-க்கும் மேற்பட்டோா் மீது காா் மோதியது. இதில்,ரங்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்த முதியவா் ராஜ்குமாா், கௌதமன், திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 போ் காயம் அடைந்தனா். அனைவரும் தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த ஈரோடு தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனா். அதில், சிவகுமாா் ஓட்டி வந்த காரில் பிரேக் பிடிக்காததால் காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் சாலையோரம் நின்றவா்கள் மீது காா் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது.
விபத்து குறித்த சிசிடிவி காட்சி, சமூக ஊடகத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்திள்ளது. இந்த விபத்து குறித்து தாலுகா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.