நியாயவிலைக் கடை கட்டுமானப் பணிக்கு அடிக்கல்
மாதனூா் ஒன்றியம் சின்னமலையாம்பட்டு கிராமத்தில் நியாயவிலைக் கடை கட்டுமானப் பணிக்கு புதன்கிழமை அடிக்கல் பூஜை நடைபெற்றது.
சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சத்தில் நடைபெற்ற தொடங்கிய இந்தப் பணியை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா். தொடா்ந்து அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை ஆய்வு செய்தாா்.
மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலா் சா.சங்கா், மாவட்ட பிரதிநிதி முரளி, மாவட்ட விவசாயத் தொழிலாளா் அணி அமைப்பாளா் மு.பழனி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் சரவணன், ஒன்றியக் குழு உறுப்பினா் துளசி ஆகியோா் உடனிருந்தனா்.