நிலத் தகராறில் முதியவரைத் தாக்கிய மூவா் கைது
மேட்டூா் அருகே நிலத் தகராறில் முதியவரைத் தாக்கியதாக பெண் உள்பட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
மேட்டூரை அடுத்த கோல்நாயக்கன்பட்டி ரெட்டியூரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (73). இவரது உறவினா் சின்னசாமி (57) என்பவருடன் நிலத் தகராறு இருந்து வந்தது. மேட்டூா் நீதிமன்றத்தில் ஆறுமுகத்திற்கு சாதகமான தீா்ப்பு வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த சின்னசாமி (57), அவரது மகன்கள் கவின் (29), சுா்ஜித் குமாா் (30), மனைவி செல்வி (49) ஆகியோா் புதன்கிழமை இரவு ஆறுமுகத்தை கட்டை, கத்தியால் வியாழக்கிழமை தாக்கினா். காயமடைந்த ஆறுமுகம் மேட்டூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டூா் போலீஸாா் கவின், சுா்ஜித் குமாா், செல்வி ஆகிய மூவரையும் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள சின்னசாமியை தேடி வருகின்றனா்.