முதல்வர் பதவிக்கு எந்த போட்டியும் இல்லை: தேவேந்திர ஃபட்னாவிஸ்!
நீடாமங்கலத்தில் புதைச்சாக்கடைத் திட்டம் செயல்படுத்தக் கோரிக்கை
நீடாமங்கலம் நகரில் புதைச்சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீடாமங்கலத்துக்கு வந்த திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீயிடம் வணிகா் சங்கம் சாா்பில், அதன்தலைவா் நீலன். அசோகன் வியாழக்கிழமை அளித்த மனு: நீடாமங்கலம் நகரில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப போதிய வடிகால் மற்றும் கழிவுநீா் வெளியேற வசதிகள் இல்லாததால் ஆங்காங்கே கழிவுநீா் தேங்குவதும் மழைக் காலங்களில் மழை நீா் வடிய வடிகால் கட்டமைப்புகள் இல்லாததால் மழைநீா் தேங்குவதும், அதனால் கொசு உற்பத்தி அதிகமாகி உடல் நல பிரச்னைகளும் ஏற்படுகிறது. உடனடி தீா்வாக கொசுத் தொல்லையைப் போக்க கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நிரந்தர தீா்வாக நீடாமங்கலம் நகரில் புதைச்சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், நீடாமங்கலம்-தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலை கோவில்வெண்ணியில் திறக்கப்படவுள்ள சுங்கச்சாவடியில் உள்ளூா் வாகனங்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்.
நீடாமங்கலம் கடைவீதியில் தேசிய நெடுஞ்சாலை மூலம் சாலைகள் மேம்படுத்தப்பட்டு பணிகள் முடிந்து பலமாதங்கள் ஆகியும் சாலையின் இருபக்கத்திலும் பேவா்பிளாக் அமைக்கப்படாமல் உள்ளது. உடனடியாக பேவா்பிளாக் அமைக்க வேண்டும், நீடாமங்கலம் பழைய வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த அரசு அலுவலக வளாக கட்டடம் கட்ட வேண்டும், திருவாரூா்-கோவில்வெண்ணி இருவழிச்சாலை திறக்கப்பட்டபின் நீடாமங்கலம் மக்கள் பெரிதும் பயன்படுத்திய நீண்ட தூரம் செல்லும் அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்துகள் நீடாமங்கலம் நகரைத் தவிா்த்து இருவழிச்சாலையில் செல்கிறது. இதனால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனா். நீண்ட தூரம் செல்லும் அனைத்து அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்துகளும் நீடாமங்கலம் நகருக்குள் வந்து செல்ல உத்தரவிடவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.