விழுப்புரம், கடலூரில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரம்: முதல்வர் ஸ்டாலின்
நீடாமங்கலம் அருகே மாநில அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டி
நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
போட்டிகளை பெங்களூர் தர்மராஜ் குடும்பத்தினர் தொடங்கி வைத்தனர். பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோயில் நிர்வாக அதிகாரி எஸ்.மாதவன், அறநிலைய ஆய்வாளர் வினோத்கமல் ஊராட்சிமன்றத் தலைவர் கே.மோகன், ஒன்றியக்குழு உறுப்பினர் கே.பாரதிமோகன், திருவாரூர் மாவட்ட சதுரங்க் கழக மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, மதுரை, சேலம், கடலூர் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடினர். 7 வயதுக்குட்பட்டோர், 9 வயதுக்குட்பட்டோர், 11 வயதுக்குட்பட்டோர், 13 வயதுக்குட்பட்டோர், 25 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.
காங்கிரஸ் கோரிக்கை வைத்தால் மாட்டிறைச்சிக்குத் தடை: அசாம் முதல்வர்!
இதில் மாணவ, மாணவிகள் சுமார் 450 பேர்கள் கலந்து கொண்டனர். முதன்மை நடுவர் சிலம்பரசன் தலைமையில் 20 பேர்கள் நடுவர்களாக இருந்து வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். வெற்றி பெற்ற அணியினருக்கு எம்.கே.ராமநாதன் நினைவு கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது. 150 கோப்பைகள், கேடயங்கள், வண்ணச்சான்றிதழ்கள் ஆகிய பரிசுகளை விளையாட்டு வீரர்கள் பெற்றனர்.
சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு போட்டிகளை ரசித்தனர். நிறைவில் சதுரங்க கழக மாவட்ட நிர்வாகி இளையராஜா பார்த்திபன் நன்றி கூறினார். போட்டுகளுக்கான ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட சதுரங்க கழகம், நீடாமங்கலம் வட்ட சதுரங்க கழகம், எஸ்.எஸ்.சதுரங்க பயிற்சி மையம், பூவனூர் சதுரங்க கழகம் இணைந்து செய்திருந்தனர்.