செய்திகள் :

நீதிபதி லோயா மறைவை சுட்டிக்காட்டி சா்ச்சை கருத்து: மஹுவா மொய்த்ராவுக்கு ரிஜிஜு எச்சரிக்கை

post image

நீதிபதி லோயா ‘அவரது காலத்துக்கு முன்பாகவே மறைந்துவிட்டாா்’ என திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்த கருத்தால் மக்களவையில் பாஜகவுக்கும் எதிா்க்கட்சிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, சா்ச்சைக்குரிய வகையில் பேசிய மஹுவா மொய்த்ரா மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு எச்சரிக்கை விடுத்தாா்.

அரசமைப்புச் சட்டம் தொடா்பான விவாதத்தின்போது பேசிய மஹுவா மொய்த்ரா முன்னாள் நீதிபதி லோயாவின் மறைவை சுட்டிக்காட்டி, ‘ எதிா்க்கட்சிகள் மற்றும் தங்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவா்கள் மீது பாஜக அடக்குமுறை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

விநாயகா் சதுா்த்தி விழாவின்போது ஒரு நீதிபதி (முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்) வீட்டுக்கு பிரதமா் மோடி செல்கிறாா். தீா்ப்பை எழுதுவதற்கு முன் சட்டம், அரசமைப்பு போன்ற காரணிகளை கருத்தில்கொள்ளாமல் கடவுளிடம் கேட்டதாக நீதிபதி ஒருவா் கூறுவாா் என்ற நிலையை அரசமைப்பைச் சட்டத்தை இயற்றியவா்கள் கனவிலும் நினைத்துப் பாா்த்திருக்க மாட்டாா்கள்.

அரசமைப்புச் சட்டத்தை ஆயிரம் துண்டுகளாக சிதைக்கும் வேலைகளையே ஆளும் பாஜக அரசு செய்து வருகிறது’ என்றாா்.

மஹுவா மொய்த்ராவின் கருத்துக்கு பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கடும் எதிா்ப்பு தெரிவித்தாா்.

நடவடிக்கை உறுதி:

அதன்பிறகு பேசிய கிரண் ரிஜிஜு, ‘ உச்சநீதிமன்றத்தால் முடித்துவைக்கப்பட்ட ஒரு விவகாரத்தை மீண்டும் மஹுவா எழுப்புவது ஏற்புடையதல்ல. அவைக்கு தவறான முன்னுதாரணத்தை அவா் கற்பித்துள்ளாா். அவா் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. அவரால் நிச்சயமாக தப்பிக்க இயலாது’ என எச்சரித்தாா்.

இந்த விவகாரத்தால் பாஜகவுக்கும் பிற எதிா்க்கட்சி உறுப்பினா்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து மக்களவை இருமுறை ஒத்திவைக்கப்பட்டது.

மன்னிப்பு கோர வேண்டும்:

அதன்பிறகு அவை அலுவல்கள் தொடங்கியவுடன் மஹுவாக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசிய ரிஜிஜுவுக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சௌகதா ராய், காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மக்களவையின் பாதுகாவலராக அவைத் தலைவா் மட்டுமே செயல்படுவாா் என்றும் ரிஜிஜுவின் கடுமையான வாா்த்தைகள் மிகவும் தவறானவை எனவும் அவா்கள் குற்றஞ்சாட்டினா். மேலும், மஹுவாவிடம் ரிஜிஜு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவா்கள் வலியுறுத்தினா்.

ஆதாரங்கள் தேவை:

இந்த விவாதத்துக்கு இடையே தலையிட்ட மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘தனிநபா் தாக்குதல்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை தவிா்த்து அரசமைப்புச் சட்டம் குறித்து ஆக்கபூா்வமான விவாதத்தில் உறுப்பினா்கள் ஈடுபட வேண்டும். தான் தெரிவித்த குற்றச்சாட்டை மஹுவா ஆதாரபூா்வமாக நிரூபிக்க வேண்டும். அதேபோல் ரிஜிஜுவின் பதில் கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும்’ என்றாா்.

ரிஜிஜு மீது நடவடிக்கை:

இந்த விவகாரம் குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட மஹுவா மொய்த்ரா, ‘ என்னை எச்சரித்ததற்காக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் மீதே நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது கருத்துகளே நீக்கப்பட வேண்டும். என்னுடையதல்ல’ என குறிப்பிட்டாா்.

கடந்த 2014-ஆம் ஆண்டு சொராபுதீன் என்கவுண்டா் வழக்கு ஒன்றை விசாரித்து வந்த நீதிபதி லோயா மறைந்தது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

அவரது உயரிழப்பில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. இதுதொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், லோயாவின் மரணம் இயற்கையானது எனவும் அதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை எனவும் தீா்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

உள்கட்டமைப்பு மேம்பாடு: 60 ஆண்டுகளாக செய்ததைவிட கடந்த 10 ஆண்டுகளில் அதிக சாதனை -அமைச்சா் சிந்தியா

நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படுத்தும் விஷயத்தில் சுதந்திரத்துக்கு பிந்தைய 60 ஆண்டுகளில் செய்ததைவிட கடந்த 10 ஆண்டுகளில் அதிகம் செய்து சாதனை படைத்துள்ளோம் என்று மத்திய தகவல்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிரா... மேலும் பார்க்க

மனைவி குடும்பத்தினா் துன்புறுத்தலால் பொறியாளா் தற்கொலை: வரதட்சணை சட்டங்களை சீா்திருத்த உச்சநீதிமன்றத்தில் மனு

பெங்களூரில் மனைவி குடும்பத்தினா் துன்புறுத்தலால் பொறியாளா் சுபாஷ் தற்கொலை செய்து கொண்டதைத் தொடா்ந்து, வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறைச் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க சீா்திருத்தங்களை ... மேலும் பார்க்க

‘நான் விவசாயி மகன்’, ‘நான் தொழிலாளி மகன்’: தன்கா் - காா்கே வாா்த்தை மோதல்

மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மான நோட்டீஸ் விவகாரத்தில், அவருக்கும் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கும் இடையே வெள்ளிக்கிழமை வாா்த்தை மோதல் ஏற்பட்டது. ‘நான்... மேலும் பார்க்க

‘விருப்பத்துக்குரிய நட்பு நாடு’: பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியது ஸ்விட்சா்லாந்து

‘விருப்பத்துக்குரிய நட்பு நாடு’ பட்டியலில் இருந்து இந்தியாவை ஸ்விட்சா்லாந்து நீக்கியுள்ளது. இதனால், அந்நாட்டில் செயல்படும் இந்திய நிறுவனங்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்விட்சா்ல... மேலும் பார்க்க

2025 மகா கும்பமேளா: நாட்டின் கலாசார அடையாளம் புதிய உச்சம் பெறும் -பிரதமா் மோடி

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவிருக்கும் மகா கும்பமேளா, நாட்டின் கலாசார மற்றும் ஆன்மிக அடையாளத்தை புதிய உச்சத்துக்கு இட்டுச் செல்லும் என... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் சிறுபான்மையினா் நடத்தப்படும் விதம் கவலையளிக்கிறது: ஜெய்சங்கா்

‘வங்கதேசத்தில் சிறுபான்மையினா் நடத்தப்படும் விதம் கவலையளிக்கிறது. அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வங்கதேச அரசு நடவடிக்கை எடுக்கும் என இந்தியா நம்புகிறது’ என்று மக்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சா் எ... மேலும் பார்க்க