செய்திகள் :

நீலகிரி: இளைஞர்களுக்கு கிரிக்கெட் கிட்; மகளிருக்கு கிச்சன் செட்- வாக்குகளை வளைக்க களமிறங்கிய அதிமுக

post image

க்2026 - ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆட்சி நாற்காலியைத் தக்க வைக்க ஆளுங்கட்சியும், எட்டிப்பிடிக்க எதிர்க்கட்சிகளும் பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வரும் என்பதால், வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருள்கள் வழங்குவதை தேர்தல் ஆணையம் குற்றமாக பதிவு செய்யும். தேர்தல் நன்னடத்தை விதிகள் அடிப்படையில் மகளிர் உரிமைத் தொகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்த நிலையில்,

கிரிக்கெட் கிட்

இரவோடு இரவாக 5 ஆயிரம் ரூபாயை மகளிர் வங்கிக் கணக்குகளில் செலுத்தியது ஸ்டாலின் தலைமையிலான அரசு. இந்த செயலை தங்களுக்கான பின்னடைவாக் கருதிய எதிர்க்கட்சிகள், கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. அதேவேளையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாவதற்கு முன்பாக வாக்காளர்களுக்கு பரிசு பொருள்களை வழங்கி தங்கள் பக்கம் வளைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது அ.தி.மு.க.

நீலகிரி மாவட்ட அ.தி.மு.க வைப் பொறுத்தவரை த.வெ.க ஆதரவு இளைஞர்களின் வாக்குகளை தங்கள் பக்கம் கவரும் வகையில் கிராமங்கள் தோறும் கிரிக்கெட் கிட்களை வாரி வழங்கி வருகின்றனர். அதேவேளையில், தி.மு.க ஆதரவு மகளிர்களை கவரும் விதமாக வீடுகள்

கிச்சன் செட்

தோறும் கிச்சன் செட்களை வழங்கி வருகின்றனர். அ.திமு.க இலச்சினை மற்றும் நிர்வாகிகள் படங்கள் அடங்கிய பைகளில் தொகுப்பாக பரிசு பொருள்களை வழங்கி வரும் இவர்களின் முயற்சி தேர்தல் களத்தில் எடுபடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Tariff: 'அதிகாரத்தை மீறி.!' - வரிக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் - 'அவமானம்'?

உலக நாடுகளையே ஆட்டிப் படைத்த அஸ்திரம் அமெரிக்க அதிபர்‌ ட்ரம்பின் 'பரஸ்பர வரி'. இந்த வரிகளை அவர் அமெரிக்காவின் 'சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 (IEEPA)'-ன் கீழ் அமலுக்கு கொண்டு வந்தார்.இதி... மேலும் பார்க்க

AI மாநாடு: சட்டையை கழற்றிப் போராட்டம் நடத்திய காங்கிரஸ் அணி; கண்டனம் தெரிவிக்கும் பாஜக!

இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பறைசாற்றும் வகையில் டெல்லியில் 'இந்திய AI உச்சிமாநாடு 2026' (India AI Impact Summit) நடைபெற்றுவருகிறது. இந்த மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பிரதிந... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் 'ஹவுஸ்புல்' - தொகுதிப் பங்கீட்டில் ஸ்டாலினுக்குக் காத்திருக்கும் சவால் என்ன?

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தடபுடலாக தயாராகி கொண்டிருக்கின்றன.பேரணி, பிரசாரம், கூட்டணிப் பேச்சுவார்த்தை, தேர்தல் வாக்குறுதி என கட்சிகள் தீவிர களப்பணியில் இறங்கி இருக்கும் சூழலில், திம... மேலும் பார்க்க

KN Nehru: ``இதெல்லாம் எங்களுக்கு பின்னடைவல்ல..." - நீதிமன்ற உத்தரவு குறித்து ஆர்.எஸ் பாரதி!

அமைச்சர் கே.என்.நேரு மீதான அமலாக்கத்துறையின் ஊழல் புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அ.தி.மு.க எம்.பி இன்பதுரை வழக்கு தொடர்ந்திருந்தார்.அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற... மேலும் பார்க்க

`எதிர்க்கட்சித் தலைவருக்கு நன்றி' - சட்டமன்றத்தில் உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்!

ஸ்டாலின்மனநிறைவுடன் நிற்கிறேன்16-வது சட்டமன்றத் தொடரின் நிறைவு நாளான இன்று, முதல்வர் ஸ்டாலின் அவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக உரையாற்றினார். அவரின் உரையில், ``பகுத்தறிவு பகலவன் தந்தை ப... மேலும் பார்க்க