செய்திகள் :

நீலகிரி: மின் கம்பத்தின் கீழ் காயங்களுடன் இறந்து கிடந்த பெண் சிறுத்தை; வனத்துறை சொல்வது என்ன?

post image

சிறுத்தைகளின் இயற்கைக்கு மாறான இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நீலகிரி வனக்கோட்டத்தில் மேலும் ஒரு பெண் சிறுத்தையின் பரிதாப இழப்பு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள ஃபாரஸ்ட் டேல் பகுதியில் மின்கம்பத்தின் கீழ் சிறுத்தை ஒன்று இறந்து கிடைப்பதாக நேற்று காலை வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.

உயிரிழந்த பெண் சிறுத்தை

அதன் அடிப்படையில் நேரில் சென்று ஆய்வு செய்த வனத்துறையின் களப்பணியாளர்கள், சிறுத்தையின் இறப்பை உறுதி செய்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.

கால்நடை மருத்துவர்களுடன் சென்ற அதிகாரிகள், இறந்து கிடந்த சிறுத்தையின் உடலை மீட்டு உடற்கூராய்வு செய்திருக்கிறார்கள். இறந்து கிடந்தது சுமார் 2 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை என்றும் உடலில் சில இடங்களில் காயங்கள் இருப்பதையும் கண்டறிந்துள்ளனர். உடல் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள்.

இது குறித்துத் தெரிவித்துள்ள வனத்துறையினர், "இந்தப் பகுதியில் சிறுத்தை மற்றும் கரடிகளின் நடமாட்டம் காணப்படுவது இயல்புதான். நேற்று முன்தினம் இரவு இரண்டு கரடிகள் சேர்ந்து இளம் சிறுத்தையை விரட்டி சண்டையிடுவதை தேயிலைத் தொழிற்சாலை பணியாளர்கள் பார்த்திருக்கிறார்கள்.

கரடிகளுக்குப் பயந்த அந்தச் சிறுத்தை அருகிலிருந்த மின் கம்பத்தின் உச்சி வரை ஏறியிருக்கிறது.

உயிரிழந்த பெண் சிறுத்தை
உயிரிழந்த பெண் சிறுத்தை

மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்து கீழே விழுந்திருக்க வாய்ப்பிருக்கிறது. முன்னங்கழுத்து பகுதியில் கரடிகள் தாக்கியதைப் போன்ற இரண்டு காயங்கள் உள்ளன.

அதேபோல் முதுகு பகுதியில் மின்சாரம் பாய்ந்ததற்கான அறிகுறிகள் தெரிகின்றன. உடற்கூறாய்வு முடிவுகள் வந்தால் மட்டுமே இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

பள்ளி சைக்கிள் ஷெட் மீது விழுந்த காலணி; எடுக்க முயன்ற மாணவன் மின்சாரம் தாக்கி பலி.. கேரளாவில் சோகம்!

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், வலியபாடத்தைச் சேர்ந்த மனு என்பவரது மகன் மிதுன்(13). தேவலக்கரை பகுதியில் உள்ள ஆண்கள் உயர்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவந்தான். நேற்று பள்ளிக்குச் சென்றபோது மாணவ... மேலும் பார்க்க

விருதுநகர்: செவல்பட்டி பட்டாசு ஆலை விபத்து; கழிவு வெடிகள் வெடித்ததில் ஒருவர் படுகாயம்; என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள துலுக்கன்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கு வெம்பக்கோட்டை அருகில் உள்ள செவல்பட்டியில் சரவணா பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது.மாவட்ட வருவாய் அலுவ... மேலும் பார்க்க

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: ”கனவாக இருக்கக் கூடாதா..?”- கதறித் துடிக்கும் பெற்றோர்!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தனர். 18 கு... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: "இரவில் திடீர், திடீரென விழித்துக்கொள்கிறார்" -உயிர் தப்பிய நபர் படும் அவஸ்தை

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12-ம் தேதி ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மருத்துவக் கல்லூரி வளாகக் கட்டடத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில், விமானத்தில் ... மேலும் பார்க்க

திருவள்ளூர் ரயில் தீ விபத்து: "பெட்டி தடம் புரண்டதுதான் காரணமா?" - ஆட்சியர் பிரதாப் விளக்கம்

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே ஆயில் ஏற்றி வந்த சரக்கு ரயிலில் தீப்பற்றி இருக்கிறது. தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு 60 பேர் கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்புக்குழு விரைந்துள்ளனர். தீயை அணைக்கும் முயற்சி தீ... மேலும் பார்க்க

Thiruvallur Train Fire: திருவள்ளூரில் சரக்கு ரயிலில் பெரும் தீ விபத்து; ரயில் சேவைகள் நிறுத்தம்

சென்னை மணலியிலிருந்து ஜோலார்பேட்டைக்குப் புறப்பட்ட சரக்கு ரயில், திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே தீ விபத்துக்குள்ளாகியிருக்கிறது.ரயில்வே நிர்வாகத்தின் முதற்கட்ட தகவலின்படி, ரயில் தடம் புரண்டதால் எரிபொ... மேலும் பார்க்க