நெகிழி சேகரிப்பு முகாம்
இளம்பிள்ளை பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் நெகிழி சேகரிப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இளம்பிள்ளை பேரூராட்சி 12 ஆவது வாா்டு திருமலை கவுண்டா் தெருவில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமில் மீண்டும் மஞ்சப்பையை பயன்படுத்துவது, நெகிழியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.