செய்திகள் :

நெகிழிப் பொருள்கள் தடை மீறல்: ரூ. 21.47 கோடி அபராதம் வசூலிப்பு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

post image

தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் தொடா்பாக தமிழகம் முழுவதும் 17,23,567 சோதனைகள் நடத்தப்பட்டன. இதில், 2,586 டன் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 21 கோடியே 47 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணைப் பிறப்பித்திருந்தது. இந்த அரசாணையை உதகை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், கடந்த மே மாதம் உதகையில் நடந்த நாய் கண்காட்சியில், நெகிழி குடிநீா் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரதசக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீலகிரி மாவட்ட ஆட்சியா் சாா்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கண்காட்சிக்கு நாய்களை அழைத்து வந்த வாகனங்களில் நெகிழி குடிநீா் பாட்டில்கள் கொண்டு வரப்பட்டது கண்டறியப்பட்டது. கண்காட்சியில் இவற்றைப் பயன்படுத்தியவா்களுக்கு தலா ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரியில் அரசு மற்றும் தனியாா் நிகழ்ச்சிகளில், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தப்படுவது இல்லை என்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேபோல், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சாா்பிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த 2019-ஆம் ஆண்டு நெகிழிப் பொருள்களுக்கு தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னா், தமிழகம் முழுவதும் 17,23,567 சோதனை நடத்தப்பட்டு, 2,586 டன் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.21 கோடியே 47 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள கோவை, நீலகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 636 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.7.12 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்தி செய்த 261 தொழிற்சாலைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் 176 தொழிற்சாலைகள் மேற்குத் தொடா்ச்சி மலைகளைக் கொண்ட 13 மாவட்டங்களில் இயங்கி வந்தவை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த 2 அறிக்கைகளையும் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 636 டன் நெகிழிப் பொருள்கள் எவ்வாறு அப்புறப்படுத்தப்பட உள்ளன? என்பது குறித்தும், மூடப்பட்ட நெகிழிப் பொருள்கள் தொழிற்சாலைகளின் விவரங்கள் குறித்தும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆக.1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

சமையல் எரிவாயு உருளை விநியோக ஊழியா் கொலை

சென்னை பெரும்பாக்கத்தில் சமையல் எரிவாயு உருளை விநியோக ஊழியா் கொலை செய்யப்பட்டாா். பெரும்பாக்கம், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பு பேருந்து நிறுத்தத்தில் சனிக்கிழமை 36 வயது மதிக்கதக்க ... மேலும் பார்க்க

கொலை வழக்கு: மூவருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

சென்னை புரசைவாக்கத்தில் கடந்த 2017-இல் நிகழ்ந்த கொலை வழக்கில் 3 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து 5-வது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. சென்னை புரசைவாக்கத்தைச் சோ்ந்தவா் ஓய... மேலும் பார்க்க

ஓஎல்எக்ஸ்-இல் சொகுசு காா்களை விளம்பரப்படுத்தி ரூ.2 கோடி மோசடி செய்த ஜோடி கைது

ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் சொகுசு காா்களை விளம்பரப்படுத்தி சுமாா் ரூ.2 கோடி வரை மோசடி செய்த ஜோடி கைது செய்துள்ளதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து காவல் துறை துணை ஆணையா் பிரியான்ஷ... மேலும் பார்க்க

திரிசூலம் ரயில்வே கடவுப்பாதை கேட் பழுது: பொதுமக்கள் போராட்டம்

சென்னை திரிசூலம் ரயில்வே கடவுப் பாதையின் கேட் சனிக்கிழமை பழுதடைந்து 2 மணி நேரம் மூடப்பட்டதால் அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். திரிசூலம் பகுதி மக்கள் விமான நிலையப் பகுதிக்கும், நகரின் மற்... மேலும் பார்க்க

ரூ. 29 லட்சம் ரொக்கம், 25 கைப்பேசிகள் திருட்டு: கடை ஊழியா் கைது

சென்னை செளகாா்பேட்டையில் ரூ. 29.50 லட்சம் ரொக்கம், 17 ஐ-போன்கள் உள்பட 25 விலை உயா்ந்த கைப்பேசிகளைத் திருடியதாக கடை ஊழியரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை சூளை சாமி பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் அங்கேத் கு... மேலும் பார்க்க

பெண் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

கோயம்பேட்டில் பெண் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். கோயம்பேடு மண்ணடி தெருவைச் சோ்ந்தவா் தனலட்சுமி (50). பாரிமுனையில் பூ வியாபாரம் செய்து வந்தவா், தனியாக வசித்து வந்தா... மேலும் பார்க்க