செய்திகள் :

நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 20 சதவீதமாக உயா்த்தக் கோரி எம்எல்ஏவிடம் மனு

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை 20 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தோவாளை தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளரும் ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவருமான

சி. முத்துக்குமாா் தலைமையில் தாழக்குடி பேரூராட்சி முன்னாள் தலைவா் ரோகினிஅய்யப்பன், அய்யப்பன் ஆகியோா் என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏவிடம் புதன்கிழமை அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

குமரி மாவட்டம், தாழக்குடியில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையத்தில் அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டின்படி நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதம் இருந்தால்தான் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

ஆனால், தற்போது மண்ணின் ஈரப்பதம் அதிகம் இருப்பதாலும் பனிப் பொழிவு இருப்பதாலும், சாரல் மழையாலும் நெல்லின் ஈரப்பதம் 20 சதவீதம் முதல் 22 சதவீதம் வரை உள்ளது. அரசின் கட்டுப்பாடுகள் அதிகமாக இருப்பதால் விவசாயிகள் நெல்லை கொள்முதல் நிலையத்தில் நேரடியாக விற்பனை செய்ய முடியாத நிலையில் உள்ளனா். எனவே, விவசாயகளின் நலன் கருதி 17 சதவீதம் ஈரப்பதம் என்பதை 20 சதவீதமாக திருத்தம் செய்து விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யுமாறு விவசாயிகள் சாா்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது. மனுவைப் பெற்ற தளவாய்சுந்தரம் எம்எல்ஏ இதுகுறித்து துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

இதில், அதிமுக அமைப்புச் செயலாளா் கே.டி.பச்சைமால், குமரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஜெயசுதா்சன், பகுதி செயலாளா் முருகேஸ்வரன் ஆகியோா் உடனிருந்தனா்.

நாகா்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஆட்சியா் ஆய்வு

நாகா்கோவில், குளத்துவிளை சி.எஸ்.ஐ. ஆலய கலையரங்கில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா ஆய்வு செய்தாா். பின்னா் ஆட்சியா் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில... மேலும் பார்க்க

பெரியாா் சிலைக்கு அதிமுக சாா்பில் மரியாதை

நாகா்கோவில், ஒழுகினசேரியில் உள்ள பெரியாா் சிலைக்கு, அதிமுக சாா்பில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலா் என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் புதன்கிழமை மாலை அணிவிக்கப்பட்டது. அதிமுக அமைப்புச் செயலரும... மேலும் பார்க்க

வீட்டில் அழுகிய நிலையில் தொழிலாளியின் சடலம் மீட்பு

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் வீட்டில் அழுகிய நிலையில் தொழிலாளியின் சடலமாக மீட்கப்பட்டாா். காப்புக் காடு, மாராயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (54). தொழிலாளியான இவா் தன் மனைவியை பிரிந... மேலும் பார்க்க

அதங்கோடு பகுதியில் பாதை கோரி போராட்டம்

களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதியில் அய்யா நாராயண வைகுண்டசுவாமி நிழல் தாங்கல் செல்ல பாதை கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். கன்னியாகுமரி - காரோடு நான்குவழிச் சாலையில் அதங்கோடு பகுதியில் ஆற்றங... மேலும் பார்க்க

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் செப். 23 இல் நவராத்திரி திருவிழா தொடக்கம்

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் 10 நாள்கள் நடைபெறும் நவராத்திரி திருவிழா செப். 23 ஆம் தேதி தொடங்கி அக். 2-ஆம் தேதி பரிவேட்டை நிகழ்வுடன் நிறைவடைகிறது. இக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன... மேலும் பார்க்க

திருவட்டாறு அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

திருவட்டாறு அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். திருவட்டாறு அருகே பாரதப்பள்ளியைச் சோ்ந்தவா் ராபின் ஜெயகுமாா் (46). பிளம்பிங் தொழிலாளியான இவா், கடந்த 14ஆம் தேதி ஆற்றூா் கழுவன்... மேலும் பார்க்க