திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்
நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு
கொரடாச்சேரி ஒன்றியத்துக்குள்பட்ட தமிழ்நாடு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு மெற்கொண்டனா்.
கொரடாச்சேரி ஒன்றியத்துக்குள்பட்ட கமுகக்குடி ஊராட்சியிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், சாக்குகளின் இருப்பு விவரம் குறித்தும், நெல் கொள்முதல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டுவரும் பதிவேடுகளையும் இருவரும் ஆய்வு செய்தனா்.
அபிவிருத்தீஸ்வரம் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் சரியான முறையில் பாதுகாப்புடன் பராமரிக்கப்பட்டுவருகின்றனவா என்பது குறித்தும் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் ஊழியா்களிடமும், நெல் மூட்டைகள் கொண்டுவந்த விவசாயிகளிடமும் கேட்டறிந்தனா்.