சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள்: உரிமையாளா்களுக்கு அபராதம்
நெல்லை: கத்தியுடன் ரீல்ஸ் வெளியிட்ட முன்னாள் ராணுவ வீரர்; சிறையில் அடைத்த காவல்துறை; பின்னணி என்ன?
நெல்லை மாவட்டத்தில் சாதிய மோதல்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துகள் மற்றும் காணொளிகள் பதிவிடப்படுவதை காவல்துறையினர் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். கத்தியுடன் ரீல்ஸ் பதிவது, பிற சமூகத்தினரையும் சமூகத் தலைவர்களையும் அவமரியாதை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நெல்லையை அடுத்த பால்கட்டளை கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் காணொளி வெளியிட்டதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். முன்னாள் ராணுவ வீரரன அவர் தற்போது நெல்லையில் ஆன்லைன் கம்பெனி நடத்தி வருகிறார். அத்துடன், தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களில் பணியாற்றுவோருக்குப் பயிற்சி வகுப்புகளும் எடுத்து வருகிறார்.
ஆயுதங்கள் பறிமுதல்
கையில் நீளமான பட்டாக்கத்தியைச் சுழற்றியபடி ஜீப்பில் ஏறிக்குதித்து அமர்வது போலவும், நின்றபடியே ஜீப்பில் பயணிப்பது போலவும் விதவிதமாக காணொளி எடுத்து சமூக வலைத்தளத்தில் கனகராஜ் பதிவேற்றியுள்ளார். அவை வைரலாக பரவத் தொடங்கியதும் காவல்துறையின் கண்ணில் பட்டுள்ளன.
பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் காணொளி வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாநகர அணையர் ரூபேஷ்குமார் மீனா எச்சரித்திருந்தார். இந்தச் சூழலில், கனகராஜ் கத்தியுடன் ரீல்ஸ் வெளியிட்டது சர்ச்சையானதால், பிறரை அச்சுறுத்தும் வகையிலிருந்ததாக அவரை பெருமாள்புரம் காவல்துறையினர் இன்று (அக்டோபர் 29) கைது செய்தனர். காணொளி எடுக்கப் பயன்படுத்தப்பட்ட ஜீப் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88