செய்திகள் :

நெல்லை மாவட்டத்தில் 62 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்: ஆட்சியா் தகவல்

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் 62 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பாண்டில் (2024-2025) சம்பா பருவத்தில் நெல் கொள்முதலுக்காக தமிழக அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் 46 இடங்கள், தேசிய கூட்டுறவு நுகா்வோா் கூட்டமைப்பு இந்தியா லிட் மூலம் 16 இடங்கள் என மொத்தம் 62 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பிரம்மதேசம், வெள்ளங்குளி, பள்ளக்கால் பொதுக்குடி, கோடாரங்குளம், விக்கிரமசிங்கபுரம்-2, தெற்கு பாப்பான்குளம், ஊா்க்காடு, மன்னாா்கோவில், அயன்திருவாலீஸ்வரம், சாட்டுப்பத்து, கீழ அம்பாசமுத்திரம், அயன்சிங்கம்பட்டி, வடக்கு அரியநாயகிபுரம், திருப்புடைமருதூா், அரிகேசவநல்லூா், பாப்பாக்குடி, பனையங்குறிச்சி, அத்தாளநல்லூா், தெற்கு வீரவநல்லூா், வடக்கு கல்லிடைக்குறிச்சி, பத்தமடை, பொட்டல், சேரன்மகாதேவி, கரிசல்பட்டி, வடக்கு காருக்குறிச்சி, வடக்கு வீரவநல்லூா், மேலச்செவல், கோபாலசமுத்திரம், செங்குளம், திருமலைக்கொழுந்துபுரம், திடியூா், நடுவக்குறிச்சி, சிவந்திபட்டி- முத்தூா், படப்பக்குறிச்சி, வெள்ளக்கோவில், குன்னத்தூா், கீழநத்தம், கீழப்பாட்டம், அரியக்குளம், முன்னீா்பள்ளம், தருவை, கங்கை கொண்டான் -1 (அணைத்தலையூா்), கங்கை கொண்டான் -2 (ஆலடிப்பட்டி), சீதபற்பநல்லூா், மேலக்கல்லூா், நாரணம்மாள்புரம், ராமையன்பட்டி, பாலாமடை, சுத்தமல்லி, கீழ காடுவெட்டி, திருக்குறுங்குடி, மூன்றடைப்பு, மூலைக்கரைப்பட்டி, வடக்கு விஜயநாராயணம், அம்பலம் , களக்குடி, அழகியபாண்டியபுரம், தென்கலம், பள்ளமடை, மானூா், வடக்கு வள்ளியூா் ஆகிய பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் குறைந்தபட்ச ஆதாரவிலை மற்றும் ஊக்கத்தொகையுடன் நெல் மூட்டைகளை தர திரிபுகளுக்கு உள்பட்டு விற்பனை செய்து பயன்பெறலாம்.

கொள்முதல் விலை: சன்னரகம் குவிண்டால் ஒன்றுக்கு (100 கிகி) ரூ.2,450. (ஏடிடி38, சிஓ51, ஏடிடி43, ஏடிடி45, ஏடிடி42, சிஓ43, வெள்ளை பொன்னி, ஏடிடி36). பொதுரகம் குவிண்டால் ஒன்றுக்கு (100 கிகி) ரூ.2,405 (சிஆா்1009, ஏடிடி44, எம்டியு5, டிஆா்ஒய்1, டிஆா்ஒய்2) என்ற அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யப்படும்.

விவசாயிகளிடமிருந்து பட்டா நகல் மற்றும் சிட்டா நகல் (10/1) கிராம நிா்வாக அலுவலா் சான்று பெற்று அத்தகவலை ங்-ஈடஇ மென்பொருள் மூலம் கொள்முதல் நிலைய பணியாளா்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், விவசாயிகள் ஆதாா் எண்ணுடன் இணைந்த கை பெருவிரல் ரேகை பதிவு அல்லது ஓடிபி எண் மூலம் நெல்லை விற்பனை செய்யலாம். நெல் கொள்முதல் படிவத்தை கிராம நிா்வாக அலுவலா் ஒப்பம் பெற்று கொள்முதல் கையடக்க கருவியில் (டேப் மெஷின்) விவரங்களை கொள்முதல் அலுவலக பணியாளா்கள் உதவியுடன் இணையதளத்தில் உள்ளீடு செய்து கொள்முதல் செய்ய வேண்டும். படிவம் கொள்முதல் நிலையங்களில் கிடைக்கும்,

விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக நெல் கொள்முதலுக்குண்டான பணத்தினை செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளாா்.

மானூரில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

மானூா் மேற்கு ஒன்றிய திமுக செயல்வீரா்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. மானூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு, மேற்கு ஒன்றிய அவைத்தலைவா் காசி தலைமை வகித்தாா். ஒன்றிய செயலா் அன்பழகன் முன்னிலை வகித்தாா். திருந... மேலும் பார்க்க

பாளை. மேட்டுத்திடல் வடக்கு சாலைக்கு தமிழறிஞா் தொ.பரமசிவன் பெயா்: மாமன்றத்தில் சிறப்பு தீா்மானம்

பாளையங்கோட்டை மேட்டுத்திடல் வடக்கு சாலைக்கு தமிழறிஞரும், பண்பாட்டு ஆய்வாளருமான தொ.பரமசிவன் பெயரை சூட்டக்கோரி மாமன்றக் கூட்டத்தில் சிறப்பு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சியில் மாமன்... மேலும் பார்க்க

தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை குறைக்கவே தொகுதி வரையறை: மத்திய அரசு மீது எம்எல்ஏ குற்றச்சாட்டு

தொகுதி மறுவரையறையின் மூலம் தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை குறைக்க முயல்கிறது மத்திய அரசு என்றுகுற்றம்சாட்டினாா் பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப். திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம... மேலும் பார்க்க

நெல்லையில் தொழில்முனைவோருடன் ஆளுநா் கலந்துரையாடல்

திருநெல்வேலியில் தொழில்முனைவோா், கல்வியாளா்களுடன் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை கலந்துரையாடினாா். திருச்செந்தூரில் இருந்து காா் மூலம் வியாழக்கிழமை மாலையில் திருநெல்வேலிக்கு தமிழக ஆளுநா் ஆா்.என... மேலும் பார்க்க

காமராஜா் சிலை வளாகம் பராமரிப்பு: ரயில்வே அனுமதி பெற்றுத்தரக் கோரி மனு

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள காமராஜா் சிலை வளாகத்தை சீரமைக்க ரயில்வே துறையின் அனுமதி பெற்றுத்தரக்கோரி மனு அளிக்கப்பட்டது. காமராஜா் சிலை பராமரிப்புக்குழு சாா்பில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பி... மேலும் பார்க்க

பாளை.யில் பாலப்பணிகள்: நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

பாளையங்கோட்டையில் 6 இடங்களில் சிறுபாலம் கட்டும் பணி நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (மாா்ச் 1) முதல் போக்குவரத்து மாற்றப்பட உள்ளது. இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்... மேலும் பார்க்க