செய்திகள் :

நெல்லை: 'விஜய் படத்தின் கீழ் அமர மாட்டேன்!' - இருக்கையை இடமாற்றிய மேயர்

post image

அரசு அலுவலகங்களில் தமிழக முதலமைச்சர் புகைப்படம் வைக்க வேண்டும் என்ற் அரசாணை உள்ளது. ஆனாலும், திமுகவின் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பு வகிக்கும் மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின் அறைகளில் முதலமைச்சர் படம் வைப்பதில் இன்னும் பிரச்சனை நீடிக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றதும், அவரது புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் வைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. அதற்கான பிரத்யேக படமும் வெளியானது. ஆனால், நெல்லை மாநகராட்சியில் மேயர், துணை மேயர் ஆகியோர் தி.மு.க-வைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அவர்களின் அறைகளில் முதல்வர் விஜய் படம் வைக்கப்படவில்லை.

இதையடுத்து, நெல்லை மாநகராட்சி அலுவலகத்தின் முன்பாக தமிழக வெற்றிக் கழகத்தினர் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மேயர் அறை
நெல்லை மேயர் அறை

நெல்லை மாநகராட்சியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் அறைகளில் முதல்வர் படத்தை வைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணாவிடம் மனு அளித்தனர். த.வெக-வினரின் பல கட்ட போராட்டத்தை தொடர்ந்து, மேயர், துணை மேயர் அறைகள் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் படம் வைக்கப்பட்டது.

அதுவும், முன்னாள் முதல்வர்களான மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் படங்களுக்கு நடுவே முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் மாட்டப்பட்டது. மாநகராட்சி ஆணையாளரின் இந்த நடவடிக்கையால் திமுகவைச் சேர்ந்த மேயர் ராமகிருஷ்ணன் அதிருப்தி அடைந்தார்.

பெயர் ராமகிருஷ்ணன் இருக்கைக்கு மேலாக, அதாவது அவரது தலைக்கு மேல் முதலமைச்சர் விஜய் புகைப்படம் இருந்தது. வழக்கமாக மேயர் ராமகிருஷ்ணன் அந்த இடத்தில் அமர்ந்து தான் அலுவலகப் பணிகளை கவனிப்பார். ஆனால் விஜய் புகைப்படத்தின் கீழ் அமர்ந்து பணியாற்ற விரும்பாத மேயர் வழக்கமாக அமரும் இருக்கையில் அமரவில்லை.

அந்த இடத்தையும் இருக்கையையும் அலுவல் பணிகளுக்குப் பயன்படுத்தாமல், அதே அறையில் வேறு ஒரு இடத்தில் போடப்பட்டிருந்த சோஃபாவில் அமர்ந்து அலுவல் பணிகளைக் கவனித்து வருகிறார். 

நெல்லை மேயர் அறை
நெல்லை மேயர் அறை

மேயர் ராமகிருஷ்ணனின் செயல் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேயரின் செயலுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துகள் வெளியாகி வருகின்றன. மேயரின் செயலைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் ராகுல் காந்தி ரத்ததானக் கழகத்தின் நிறுவனருமான வழக்கறிஞர் பிரம்மா கூறுகையில், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மேயர், அரசியலமைப்பு சட்டப்படி பதவியேற்றுள்ள தற்போதைய முதலமைச்சரை அங்கீகரித்து செயல்படுவதே மரபு.

தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புகளை நிர்வாகத்தில் காட்டுவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது. உண்மையிலேயே கொள்கைப்பிடிப்பும் கட்சிப்பற்றும் இருந்தால், மேயர் ராமகிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போகட்டும்" எனக் காட்டமாகத் தெரிவித்தார்.

திமுகவின் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பு வகிக்கும் பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட இடங்களில் முதலமைச்சர் விஜய் படத்தை வைப்பது தொடர்பாக இப்போதுவரை பிரச்சனை நீடித்து வருகிறது. அதனால் இந்த விவகாரத்தில் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என த.வெ.க-வினர் தெரிவிக்கின்றனர்.

பிரம்மா

அரசியலமைப்புச் சட்டத்தையும் பதவியேற்றபோது விருப்பு வெறுப்பற்று செயல்படுவதாகக் கூறிய உறுதிமொழியையும் மீறும் மக்கள் பிரதிநிதிகளை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்றும் த.வெ.க-வினர் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், இந்த் விவகாரம் குதித்து நெல்லை மேயர் ராமகிருஷ்ணனிடம் கேட்டதற்கு, " அரசியல் ஆதாயத்திற்காக ஒரு சிலர் இது போன்ற பிரச்சனைகளை கிளப்பி வருகிறார்கள். முதலமைச்சரின் படத்தை வைக்க வேண்டும் என்று த.வெ.க-வினர் கோரிக்கை வைத்ததும் மாநகராட்சியில் அவரது படத்தை வைத்து விட்டோம்.

இப்போது அதை எனது அறையில் மையப்பகுதியில் வைத்திருக்கிறார்கள் அங்கு அமர பிடிக்காமல் சற்று தள்ளி அமர்ந்திருக்கிறேன், அவ்வளவுதான்" என்று முடித்துக் கொண்டார்.

"பல்வேறு மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கும் நிலையில், இருக்கை விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது" என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.

'வெளிச்சம் டிவியை கட்டியெழுப்பியது யார்?' - சீண்டிக்கொள்ளும் சிறுத்தைகள்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஊடகப்பிரிவு முதன்மைச் செயலாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் பாபு சமீபத்தில் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்திருந்தார். விசிகவின் அதிகாரப்பூர்வ சேனலான 'வெளி... மேலும் பார்க்க

இஸ்ரேலின் முக்கிய நகரில் பிரமாண்ட சிவாஜி சிலை நிறுவப்படுகிறது! - பின்னணி என்ன?

இந்திய தலைநகர் புது டெல்லிக்கும் இஸ்ரேலின் டெல் அவிவ்விற்கும் இடையே வளர்ந்து வரும் கலாச்சார மற்றும் மூலோபாய உறவுகளின் ஒரு புதிய மைல்கல்லாக, இஸ்ரேலில் மராட்டியப் பேரரசர் சத்ரபதி சிவாஜி மகாராஜின் திருவு... மேலும் பார்க்க

சேலம்: `ஓட்டுக்கு ரூ.2000 கொடுத்தார் தவெக MLA லட்சுமணன்' - தவெக அதியமான் கொளுத்திப் போட்ட பின்னணி?

சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதியின் த.வெ.க வேட்பாளராக போட்டியிட்டவர் அதியமான். அ.தி.மு.க வேட்பாளர் மணியிடம் 14,539 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருந்தார். நம்பி வாக்களித்த மக்களுக்... மேலும் பார்க்க

முதல்வர் விஜய்யின் முதல் கையெழுத்து - 'சிங்கப் பெண் அதிரடிப் படை' திட்டம் இன்று தொடக்கம் | Live Updates

இன்று சிங்கப் பெண் அதிரடிப்படை திட்டம் தொடக்கம்தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றதும் போட்ட முதல் கையெழுத்துகளில் ஒன்று - சிங்கப் பெண் அதிரடிப்படை திட்டம்.இந்தத் திட்டத்தை இன்று மாலை 5 மணிக்கு சென... மேலும் பார்க்க

H-1B விசா: "1 லட்சம் கட்டணம் விதிக்க ட்ரம்பிற்கு அதிகாரம் கிடையாது" - US நீதிமன்ற தீர்ப்பு

சட்டத்திற்குப் புறம்பாக அமெரிக்காவில் குடியேறியவர்களைத் தடாலடியாக வெளியேற்றும் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அறிவிப்புகளில் ஹெச்-1பி விசா விலை ஏற்றமும் ஒன்று. அமெரிக்காவின் இந்த விசாவை அதிகம்... மேலும் பார்க்க