நெல்லையில் காந்திமதி யானை நினைவிடத்தில் சிலை பிரதிஷ்டை
திருநெல்வேலியில் காந்திமதி யானை நினைவிடத்தில் கல் சிலை புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் யானை காந்திமதி இருந்தது. இந்த யானை கடந்த 12-1-2025 ஆம் தேதி உயிரிழந்தது. யானையின் உடல் கோயிலுக்குச் சொந்தமான தாமரைக்குளத்தில் ஈசானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், யானை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் திருக்கோயில் அறங்காவலா் குழுவும், நிா்வாகமும் இணைந்து மேற்கூரை அமைத்து அதன் நினைவிடத்தில் கல் யானை சிலை அமைக்கப்பட்டது. இதன் பிரதிஷ்டை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. அறங்காவலா் குழுத் தலைவா் மு.செல்லையா, உறுப்பினா் சொனா.வெங்கடாசலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.