நைஜரில் பயங்கரவாதிகளால் இந்தியர் கடத்தல்! மத்திய அரசுக்கு குடும்பத்தினர் கோரிக்கை
நைஜரில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நைஜரின் டோசோ பகுதியில், கடந்த ஜூலை 15 ஆம் தேதி, அங்குள்ள கட்டுமானப் பணிகளுக்கு, அந்நாட்டு ராணுவப் படையினர் பாதுகாப்பு வழங்கி வந்தனர். அப்போது, அங்கு திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில், 2 இந்தியர்கள் கொல்லப்பட்டதுடன், ஒருவரை அந்த பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாக, நைஜர் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் நேற்று தெரிவித்தது.
இந்த நிலையில் கடத்தப்பட்ட இந்தியரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கடத்தப்பட்ட ரஞ்சித் சிங்கின் மனைவி ஷீலா தேவி கூறுகையில், ஜூலை 15 முதல் அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறேன். ஆனால் எந்த பதிலும் இல்லை. பலமுறை விசாரித்த பிறகுதான், பயங்கரவாதிகள் அந்த இடத்தைத் தாக்கியதாகவும், ரஞ்சித், ஒரு காட்டுப் பகுதியை நோக்கி ஓடிவிட்டதாகவும் நிறுவனம் குடும்பத்தினருக்குத் தெரிவித்தது.
தனது கணவரின் விடுதலைக்காக நிறுவனம் எந்த வெளிப்படையான முயற்சிகளையும் எடுக்கவில்லை. எங்களுக்கு மூன்று குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோர் உள்ளனர். அவரது கடத்தல் அவர்கள் பற்றி கேள்விப்பட்ட பிறகு அதிர்ச்சியில் உள்ளனர். தயவுசெய்து என் கணவரை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து வாருங்கள். தனது கணவர் பாதுகாப்பாக திரும்புவதை பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தவெக கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம்! எங்கே? எப்போது?
மேலும் இதுதொடர்பாக ராம்பன் துணை ஆணையர் முகமது அலியாஸ் கானையும் ஷீலா தேவி சந்தித்துள்ளார். அப்போது இவ்விவகாரம் நைஜரில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்திடம் எடுத்துச் செல்லப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.