ஹிந்தி, எத்தனை இந்திய மொழிகளை விழுங்கியிருக்கிறது தெரியுமா? - முதல்வர் மு.க. ஸ்ட...
நோட்டுக்குள் மறைத்து 4 லட்சம் டாலர்களை மாணவிகள் மூலம் கடத்தல்! புணேவில் இருவர் கைது!
நோட்டுக்குள் 4 லட்சம் அமெரிக்க டாலர்களை மறைத்துவைத்து 3 மாணவிகள் மூலம் கடத்த முயன்ற இருவரை புணே சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதுகுறித்து தங்களுக்கு தெரியாது என்றும், இந்த பையில் ஆவணங்கள் இருப்பதாக பயண முகவர் தெரிவித்ததாகவும் மாணவிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மாணவிகள் மூலம் கடத்தல்
புணேவில் இருந்து மூன்று மாணவிகள் 7 நாள்கள் பயணமாக துபைக்கு கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், சட்டவிரோத ஹவாலா பணத்தை மாணவிகள் கடத்திச் சென்றதாக புணே சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில், மாணவிகளின் நோட்டுபுத்தகங்களுக்குள் 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் (ரூ. 3.47 கோடி) கடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
உடனடியாக, துபை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளை தொடர்புகொண்டு மூன்று மாணவிகளையும் திருப்பி அனுப்ப புணே சுங்கத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
இதனடிப்படையில் மூன்று மாணவிகளும் புணே விமான நிலையத்துக்கு பிப். 17ஆம் தேதி வந்த நிலையில், அவர்களிடம் இருந்த ஹவாலா பணத்தை பறிமுதல் செய்து விசாரணையை தொடங்கினர்.
இதையும் படிக்க : பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி!
இருவர் கைது
புணேவைச் சேர்ந்த குஷ்பு அகர்வால் என்ற பயண முகவர், மாணவிகள் துபைக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
அவர்கள் இண்டிகோ விமானத்தில் துபை செல்வதற்கு முன்னதாக கடைசி நிமிடத்தில் ஒரு பேக்கை அவர்களிடம் கொடுத்த குஷ்பு அகர்வால், இதில் தனது அலுவலக ஆவணங்கள் இருப்பதாகவும் இதனை துபையில் அழைத்துச் செல்பவரிடம் கொடுக்குமாறும் அகர்வால் கேட்டுள்ளார்.
அவர் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் அந்த பேக்கை துபைக்கு கொண்டு சென்றதாக மாணவிகள் வாக்குமூலம் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, பயண முகவர் அகர்வாலை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில், மும்பையை சேர்ந்த அந்நிய செலவாணியில் ஈடுபடும் முகமது அமீர் என்பவரை கைது செய்தனர்.