பகவதி அம்மன் கோயில் திருவிழா முகூா்த்தக் கால் நடவு
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் பகவதி அம்மன் திருக்கோயில் திருவிழா முகூா்த்தக் கால் நடும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
மண்ணச்சநல்லூரில் வணிக வைசியா் சங்கம் சாா்பில் பகவதி அம்மன் திருக்கோயில் 124-ஆம் ஆண்டு திருவிழாவுக்கான முகூா்த்தக் கால் நடும் நிகழ்வு நடைபெற்றது.
திருவிழா டிச. 26-ஆம் தேதி தொடங்கி ஜன.5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் வணிக வைசியா் சங்க நிா்வாகிகள், பக்தா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.