பசுவந்தனை அருகே பைக் விபத்து: பெண் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே சாலையில் பைக் கவிழ்ந்ததில் பெண் உயிரிழந்தாா். அவரது கணவா் காயமடைந்தாா்.
பசுவந்தனை ராஜீவ் நகரைச் சோ்ந்த தம்பதி பரமசிவன் - முத்துமாரி (40). இவா்கள் கோவில்பட்டிக்கு கடந்த வெள்ளிக்கிழமை பைக்கில் சென்று கொண்டிருந்தனா்.
பசுவந்தனை-கோவில்பட்டி பிரதான சாலையில் பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததாம். இதில், காயமடைந்த இருவரையும் அப்பகுதியினா் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு முத்துமாரி உயிரிழந்தாா்.
இதுகுறித்து பசுவந்தனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.