செய்திகள் :

பஞ்சாப்: அனைத்து பள்ளிகளிலும் பஞ்சாபி மொழிப் பாடம் கட்டாயம்!

post image

பஞ்சாபில் வரும் கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை தெலுங்கு மொழிப் பாடத்தை கட்டாயமாக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாபில் அரசு-அரசு உதவி பெறும் பள்ளிகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), இந்திய இடைநிலைக் கல்வி சான்றிதழ் தோ்வு கவுன்சில் (ஐசிஎஸ்இ) மற்றும் பிற கல்வி வாரியங்களின்கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளில் பஞ்சாபி மொழிப் பாடத்தை கட்டாயமாக்கும் வகையில், கடந்த 2008-இல் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இதையும் படிக்க : தெலங்கானா: அனைத்து பள்ளிகளிலும் 10-ஆம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயம்- மாநில அரசு உத்தரவு

ஆனால், அந்தச் சட்டத்தை அனைத்துப் பள்ளிகளும் முழு அளவில் பின்பற்றாத சூழலில், தற்போது ஆம் ஆத்மி அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், “2008 ஆம் இயற்றப்பட்ட சட்டத்தின்படி அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழிப் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்துப் பள்ளிகளும் பின்பற்ற வேண்டும். ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பஞ்சாபி மொழிப் பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சான்றிதழ் வழங்கக் கூடாது. இதனை பின்பற்றாத பள்ளியின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை சர்ச்சையான நிலையில், தெலங்கானாவைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலமும் தாய் மொழியைக் கட்டாயப் பாடமாக கற்பிப்பதை உறுதி செய்ய வலியுறுத்தியுள்ளது.

வக்ஃப் மசோதா: கூட்டுக்குழு பரிந்துரைத்த 14 திருத்தங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரைத்த 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொத்துகளை ஒ... மேலும் பார்க்க

நோட்டுக்குள் மறைத்து 4 லட்சம் டாலர்களை மாணவிகள் மூலம் கடத்தல்! புணேவில் இருவர் கைது!

நோட்டுக்குள் 4 லட்சம் அமெரிக்க டாலர்களை மறைத்துவைத்து 3 மாணவிகள் மூலம் கடத்த முயன்ற இருவரை புணே சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.இதுகுறித்து தங்களுக்கு தெரியாது என்றும், இந்த பையில் ஆவணங்கள் இருப்... மேலும் பார்க்க

அஸ்ஸாமில் மிதமான நிலநடுக்கம்!

அஸ்ஸாம் மாநிலத்தில் வியாழக்கிழமை அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம் வியாழக்கிழமை அதிகாலை 2.25 மணியளவில் ரிக்டர் அளவில் 5 ஆகப் பதிவாகிய... மேலும் பார்க்க

இந்தியா-ஆப்பிரிக்கா இடையே பரஸ்பர நன்மை பயக்கும் உறவு: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்

‘ஆப்பிரிக்காவுக்கான இந்தியாவின் அணுகுமுறை, பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான வலுவான உறுதிப்பாட்டால் வழிநடத்தப்படுகிறது’ என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை தெரிவ... மேலும் பார்க்க

பிகாா் அமைச்சரவை விரிவாக்கம் - 7 பாஜக எம்எல்ஏக்கள் புதிய அமைச்சா்களாக பதவியேற்பு

முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான பிகாா் அமைச்சரவை புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. கூட்டணிக் கட்சியான பாஜகவின் 7 எம்எல்ஏக்கள், அமைச்சரவையில் இணைக்கப்பட்டனா். பாட்னாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் 7 ... மேலும் பார்க்க

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி: பாகிஸ்தான் நபா் சுட்டுக் கொலை

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நபரை எல்லை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா். இது தொடா்பாக எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகையில், ‘பஞ்சாபின் பதான்கோட்டில் உள்ள தாஷ்படான் பகுதி... மேலும் பார்க்க