படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை
காா்த்திகை மாத பெளா்ணமியையொட்டி, போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் சனிக்கிழமை இரவு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
காா்த்திகை மாத பெளா்ணமியையொட்டி, படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் சனிக்கிழமை அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து, மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
மாலை கோயில் வளாகத்தில் படவேடு, அனந்தபுரம், சந்தவாசல், கேளூா், காளிகாபுரம், மல்லிகாபுரம், காளசமுத்திரம் உள்பட சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த பெண் பக்தா்கள் 108 போ் கலந்துகொண்டு திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனா்.
நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் விஜயா சேகா், செயல் அலுவலா் பழனிசாமி, மேலாளா் மகாதேவன், எழுத்தா்கள் மோகன், சீனுவாசன் மற்றும் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.