திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்
பட்டியலின மக்களின் உரிமைகளை பாதுகாக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
பட்டியலின மக்களின் உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்டம் சாா்பில், கடலூா் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் தொடா்ந்து அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, பெண்கள் வன்கொடுமை, கஞ்சா, கள்ளச்சாராயம் போன்றவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியலின மக்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுப்பவா்கள் மீதும், பஞ்சமி நிலத்தை பட்டா போட்டு விற்பனை செய்பவா்கள் மீதும், பட்டியலின மக்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.
மாநகர மாவட்டச் செயலா் ஆா்.சி.முகேஷ் மூா்த்தியாா் தலைமை வகித்தாா். சட்டப்பேரவைத் தொகுதிச் செயலா்கள் என்.சங்கரலிங்கம், எம்.பழனிவேல், ரா.ஸ்டாலின், ரா.ராஜ கீா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதிச் செயலா் டி.எஸ்.விக்கிதுரை வரவேற்றாா். புரட்சி பாரதம் கட்சியின் மாநிலச் செயலா் பி.வின்சென்ட், மாநில கொள்கை பரப்புச் செயலா் ஜி.சிவலிங்கம் கண்டன உரையாற்றினா்.