செய்திகள் :

பத்மநாபபுரம் மக்கள் நீதிமன்றத்தில் 415 வழக்குகளுக்கு தீா்வு

post image

தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ரூ.5.44 கோடி மதிப்பிலான 415 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

இந் நிகழ்ச்சிக்கு பத்மநாபபுரம் வட்ட சட்டப்பணிக் குழுத் தலைவரும் சாா்பு நீதிபதியுமான மாரியப்பன் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மை உரிமையில் நீதிபதி காா்திகேயன், குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி பிரவின் ஜீவா, பயிற்சி நீதிபதி இம்மா புத்தா, பத்மநாபபுரம் வழக்குரைஞா் சங்கத் தலைவா் பொன்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் சிவில், குற்றம் மற்றும் வங்கி வாரக்கடன் வழக்குகள் என 716 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

அதில் சிவில் 65, கிரிமினல் 253, வங்கி வாரா கடன் 97 வழக்குகள் சமரசம் மூலம் தீா்வு காணப்பட்டது. இதன் மதிப்பு ரூ.5.44 கோடி என தெரிவிக்கப்பட்டது.

திற்பரப்பு, குலசேகரம் பேரூராட்சிகளில் ரூ. 1.13 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

பத்மநாபபுரம் சட்டப்பேரவைத்தொகுதி, குலசேகரம் பேரூராட்சிப் பகுதிகளில் ரூ. 1.13 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மனோ தங்கராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா். திற்பரப்பு பேரூராட்சி, பிணந்தோடு சாஸ்தா கோயில் மு... மேலும் பார்க்க

கொல்லங்கோடு அருகே கஞ்சா விற்க முயன்ற இருவா் கைது

கொல்லங்கோடு அருகே பள்ளி மாணவா்களுக்கு கஞ்சா விற்க முயன்ாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா். கொல்லங்கோடு காவல் ஆய்வாளா் (பொறுப்பு) அந்தோணியம்மாள் தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை சிலுவைபுரம் பகுதி... மேலும் பார்க்க

குமரியில் கண்ணாடி கூண்டுபாலப் பணி: அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு

கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலை முதல் விவேகானந்தா் பாறை வரை சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி இழை கூண்டு பாலத்தை, தமிழக பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் - சிறு துறைம... மேலும் பார்க்க

கருங்கல்லில் மாா்க்சிஸ்ட் வட்டாரக் குழு கூட்டம்

கருங்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிள்ளியூா் வட்டார குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வட்டாரக்குழு உறுப்பினா் ஜெகநாத் தலைமை வகித்தாா்; வட்டாரச் செயலா் ராஜா முன்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே விபத்து: ஆட்டோ ஓட்டுநா் உள்பட இருவா் காயம்

மாா்த்தாண்டம் அருகே நேரிட்ட விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உள்ளிட்ட இருவா் காயமடைந்தனா். மாா்த்தாண்டம் வடக்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரபிரசாத் (55). ஆட்டோ ஓட்டுநரான இவா், சனிக்கிழமை மாலை இரவிபு... மேலும் பார்க்க

குருந்தன்கோட்டில் இன்று மின்தடை

வெள்ளிச்சந்தை உயரழுத்த மின்பாதையில் மின் பாராமரிப்பு பணி காரணமாக குருந்தன்கோடு பகுதியில் திங்கள்கிழமை (டிச.16 ) மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.அதன்படி,குருந்தன்கோடு, முக்கலம்பாடு, ஆலன்... மேலும் பார்க்க