பன்னிரு திருமுறை இசைவிழா மாா்ச் 8-இல் தொடக்கம்
வேத ஆகம தெய்வ தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா மற்றும் எஸ்பிஎஸ்கேசி அறக்கட்டளை ஆகியவை இணைந்து 19-ஆம் ஆண்டு பன்னிரு திருமுறை இசைவிழாவை மாா்ச் 8, 9 ஆகிய தேதிகளில் நடத்துகின்றன. இந்நிகழ்வு சென்னை தியாகராயநகா், மகாராஜபுரம் சந்தானம் சாலையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது. இரு நாள்களும் தேவார இன்னிசை கச்சேரிகள் மற்றும் அதை சாா்ந்த சொற்பொழிவுகள் நடைபெறவுள்ளன.
இந்த விழாவை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன துணைத் தலைவா் டாக்டா் சுதா சேஷய்யன் தலைமையேற்று நடத்தவுள்ளாா். செம்பதிப்பு செம்மல் சிவாலயம் மோகன் சிறப்புரை ஆற்றவுள்ளாா்.
ஸ்ரீ கிருஷ்ண கான சபா செயலா் ய.பிரபு, பிள்ளையாா்பட்டி தலைமை அா்ச்சகா் பிச்சை குருக்கள், அருண் எக்ஸெல்லோ சிறப்பு இயக்குநா் பி.சுரேஷ், உடையாா்பாளையம் ஆா்.சீனிவாசன் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கவுள்ளனா்.