செய்திகள் :

பப்ஜி கேமுக்கு அடிமையான கணவன்; வேலை தேடச் சொன்ன மனைவியை கொன்றுவிட்டு தலைமறைவு; ம.பி அதிர்ச்சி¡

post image

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், வேலைக்கு செல்லாமல் பப்ஜி (PUBG) விளையாட்டுக்கு அடிமையான கணவனை வேலை தேடுமாறு கூறிய மனைவியைக் கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, கொலை செய்த ரஞ்சித் படேல் என்பவருக்கும் கொல்லப்பட்ட நேஹா படேல் (24 வயது) என்பவருக்கும் இடையே கடந்த மே மாதம் திருமணம் நடந்தது.

நேஹாவின் சகோதரரின் கூற்றுப்படி ரஞ்சித் சமீபத்தில் வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார். மேலும், பப்ஜி விளையாட்டுக்கும் அடிமையானார்.

ரஞ்சித் படேல் - நேஹா படேல்
ரஞ்சித் படேல் - நேஹா படேல்

இதனால், தம்பதிக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதன்தொடர்ச்சியாக, நேஹா தன் கணவரிடம் பப்ஜி விளையாட்டிலேயே மூழ்கியிருப்பதை விட்டுவிட்டு வேலை தேடுமாறு கூறியிருக்கிறார்.

இதில் ஆத்திரமடைந்த ரஞ்சித் கடந்த சனிக்கிழமை இரவு நேஹாவின் கழுத்தை நெரித்துக் கொன்றார். கொலை செய்தது மட்டுமல்லாமல் நேஹாவின் மைத்துனருக்கு கொலை பற்றி மெசேஜ் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

அதன்பின்னர் அவரின் வீட்டுக்கு வந்த நேஹாவின் குடும்பத்தினர், உடனடியாக போலீஸுக்குத் தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து பேசியிருக்கும் போலீஸ் அதிகாரி உதித் மிஸ்ரா, ``வீட்டிற்குள் கழுத்து நெரித்த காயங்களுடன் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதில், கணவர் தலைமறைவாகிவிட்டார்.

முதற்கட்ட விசாரணையின்படி, கணவர் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையானவர் என்றும், அதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

கணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன" என்று தெரிவித்தார்.

இதற்கிடையில் நேஹாவின் குடும்பத்தினர், ரஞ்சித் மற்றும் அவரது உறவினர் கேட்ட வரதட்சணை கொடுத்த பிறகும் வரதட்சணையாக கார் கேட்டு அழுத்தம் கொடுத்ததாகக் குற்றம்சாட்டுகின்றனர்.

காவல்துறை
காவல்துறை

மேலும், செய்தியாளர்களிடம் பேசிய நேஹாவின் சகோதரர் ஷேர் பகதூர் படேல், ``என் சகோதரிக்கு இந்த மே 25-ம் தேதி திருமணம் நடந்தது. ரஞ்சித் தொடர்ந்து வரதட்சணை கேட்டுக்கொண்டே இருந்தார்.

சமீபத்தில் வேலைக்கு செல்வதையும் நிறுத்தி விட்டார். அதனால் வேலை ஏதாவது தேடுமாறு கூறிய என் சகோதரியை அவர் சண்டையிட்டு கொன்றுவிட்டார்.

அதோடு என் மைத்துனருக்கு, ``நேஹாவைத் திரும்பக் கொண்டு செல்லுங்கள். அவரை நான் கொன்றுவிட்டேன். என்ன வேண்டுமானாலும் நீ செய்" என்று மெசேஜ் செய்தார்.

இந்தக் கொலையில் இதுவரையிலும் போலீஸ் யாரையும் கைது செய்யவில்லை. ரஞ்சித் மட்டுமல்லாமல் அவரின் தந்தை, தாய், சகோதரர் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட வேண்டும்.

அவர்கள் அனைவரும் நேஹாவைத் துன்புறுத்தினர். எங்களுக்கு நீதி வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.

மறுபக்கம், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறும் போலீஸ், உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், குற்றவாளியைக் கண்டுபிடிக்கக் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

கோவை மாணவி பாலியல் சம்பவம் நடந்த அதே நாளில், அந்த 3 பேர் செய்த கொலை - விசாரணையில் பகீர் தகவல்

கோவை விமான நிலையம் அருகே அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், கடந்த நவம்பர்2-ம் தேதிகல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். நாடே அதிர்ந்த இந்த வழக்கில்,கோவை மாணவி வழக்குசிவகங்கை மாவட்டத்தைச்ச... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: மாமியாரைக் கொலைசெய்த மருமகன் - உயிருக்குப் போராடும் மனைவி; என்ன நடந்தது?

காஞ்சிபுரம், அருந்ததி நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரின் மனைவி சந்தவள்ளி (54). சந்தவள்ளியின் அம்மா திலகா (70). இவர்கள் மூன்று பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கூலி வேலை செய்யும் லட்சுமணன் போதைக்க... மேலும் பார்க்க

`SIR தொடர்பான APK ஃபைல் வந்தால், கிளிக் செய்ய வேண்டாம்’ - சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை

`சைபர்’ குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. இந்த வகை குற்றங்களைத் தடுக்க சைபர் கிரைம் போலீஸாரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனாலும், சைபர் குற்றவாளிகள் நாட்டில் நடக்கும் அன்றாட... மேலும் பார்க்க

1989-ல் கடத்தல்: 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவரை கைது செய்த சிபிஐ! - கடத்தப்பட்டது யார் தெரியுமா?

ஜம்மு காஷ்மீரில் 1989-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் முஃப்தி முகமது சயீத். அவரின் மகள் ருபையா சயீத். அவர் லால் சௌக்கில் உள்ள மருத்துவமனையில் இருந்து நவ்கானில் உள்ள தனது வீட்டிற்கு ... மேலும் பார்க்க

``சகோதரர்கள் துரோகம், போலீஸார் தூண்டுதல்; காதலன் கொலைக்கு காரணம்'' - பாதிக்கப்பட்ட பெண் வேதனை

மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட்டில் காதல் திருமணம் செய்து கொள்ள இருந்த அச்சல் (20) என்ற பெண்ணின் காதலனை அவரது உறவினர்கள் படுகொலை செய்தனர். இதையடுத்து தனது காதலன் உடல் முன்பு நெற்றியில் குங்குமம் வைத்து க... மேலும் பார்க்க

விமானத்துக்கு `மனித வெடிகுண்டு' மிரட்டல்: மும்பைக்கு திருப்பிவிடப்பட இண்டிகோ விமானம்

குவைத்திலிருந்து தெலுங்கானா நோக்கிப் புறப்பட்ட விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் செய்தி வந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.குவைத்திலிருந்து இண்டிகோவின் ஏர்பஸ் A321-251NX என்ற விமானம் அதிகாலை 1... மேலும் பார்க்க