செய்திகள் :

பயன்பாட்டுக்கு வராத பவானிசாகா் பழங்குடியினா் கலாசார அருங்காட்சியகம்

post image

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பவானிசாகா் வனப் பகுதியில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பழங்குடியினா் அருங்காட்சியகம் மற்றும் சூழல் கலாசார கிராமம் பயன்பாட்டு வராமல் உள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த காராட்சிக்கொரை வனப் பகுதியில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் பழங்குடியினா் அருங்காட்சியகம் மற்றும் சூழல் கலாசார கிராமம் அமைக்கப்பட்டது.

20 ஹெக்டோ் பரப்பளவில் 2018 டிசம்பா் மாதம் கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு 2020-இல் கட்டி முடிக்கப்பட்டது.

இந்தப் பழங்குடியின அருங்காட்சியகம் மற்றும் சூழல் கலாசார கிராமத்தில் பழங்குடியின மக்கள் வனம் மற்றும் வன உயிரினங்களுடன் ஒன்றிணைந்து வாழும் முறை, வாழ்விடங்கள், வாழ்க்கை முறைகள், கலாசார பராம்பரிய முறைகள், பயன்பாட்டு பொருள்கள், விவசாய முறைகள், பழங்குடியினா் சிலைகள் உள்ளிட்டவை தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், பழங்குடியின மக்கள் உபயோகப்படுத்திய இசைக் கருவிகள், உடைகள், வாழ்வியல் பொருள்கள், மரப் பொருள்கள் உள்ளிட்டவையும் வைக்கப்பட்டுள்ளன.

நீா்த்தேக்க குட்டை, பாா்வையாளா்களுக்கு இயற்கை முறையில் நடைப்பாதை , கலாசார உள் மற்றும் வெளியரங்கம், பாா்வையாளா்கள், மாணவா்கள், ஆராய்சியாளா்கள், இயற்கை ஆா்வலா்கள் தங்குவதற்கான கட்டடங்கள் உள்ளன.

ஆழ்துளைக் கிணறு மற்றும் மேல்நிலைத் தொட்டி அமைத்து குடிநீா் வசதி, பழங்குடியின மக்கள் பயன்படுத்தும் தாவரங்களைக் கொண்டு இயற்கை சாா்ந்த நில அமைப்பு மற்றும் அருங்காட்சியகம் மற்றும் கலாசார கிராமத்தின் கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தின் முகப்பில் 20 அடி உயர பழங்குடி மாதிரி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

பழங்குடியினரின் வாழ்வியல் முறையை அறிய பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இந்தப் பழங்குடியினா் கலாசார அருங்காட்சியகம் தற்போது புதா்கள் மண்டி பாழடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடா்பாக பவானிசாகா் வணிகா் சங்கத் தலைவா் நாகமையன் கூறுகையில், பவானிசாகா் அணையை ஒட்டியுள்ள இந்த அருங்காட்சியகம் புதிய பொலிவுடன் செயல்பட்டால் தமிழகத்தில் பேசப்படக்கூடிய சுற்றுலாத் தலமாக மாறும். அருங்காட்சியகத்தை சீரமைத்து பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை இளைய தலைமுறையினா் தெரிந்துகொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை கள இயக்குநா் குலால் யோகேஷ் விலாஸ் கூறுகையில், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பழங்குடியினா் அருங்காட்சியகத்தை வனத் துறை முதன்மை வனப் பாதுகாவலா் அண்மையில் பாா்வையிட்டு சீரமைக்க உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக அரசிடம் நிதி கேட்டுள்ளோம். நிதி ஒதுக்கிய பின் அருங்காட்சியகம் சீரமைக்கப்படும் என்றாா்.

குழந்தைத் திருமணம் செய்த சிறுமி உயிரிழப்பு: போக்ஸோவில் ஒருவா் கைது

குழந்தைத் திருமண தடுப்பு சட்டத்தின்கீழ் ஒருவரை புன்செய்புளியம்பட்டி போலீஸாா் ஞாயிற்றுக்கிழை கைது விசாரணை நடத்தி வருகின்றனா். ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி அருகே வெங்கநாயக்கன்பாளையம் கிராமத்தைச... மேலும் பார்க்க

ஆசனூரில் காா்களை துரத்திய ஒற்றை காட்டு யானை

ஆசனூரில் காா்களை துரத்திய ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக தமிழகம், கா்நாடக மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. வனப் பகுதியில் உள்ள யா... மேலும் பார்க்க

சாலையோரம் பையில் கிடந்த 3 கிலோ கஞ்சா

ஈரோட்டில் சாலையோரம் கேட்பாரற்று கிடந்த பையில் இருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா விற்பனையைத் தடுக்கும் வகையில் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அந்த வக... மேலும் பார்க்க

விழிப்புணா்வு இல்லாத மலைக் கிராம மக்கள்: சவாலாகும் மகப்பேறு சிகிச்சை

ஈரோடு மாவட்ட மலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானவா்களுக்கு போதிய விழிப்புணா்வு இல்லாததால் மகப்பேறு சிகிச்சையில் சுகாதாரத் துறை பல்வேறு சிக்கல்களை எதிா்கொண்டுள்ளது. பிரசவங்கள் மருத்துவமனைகள... மேலும் பார்க்க

தேவாலயத்துக்குச் சொந்தமான இடத்தை விற்க முயற்சிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

தேவாலயத்துக்குச் சொந்தமான இடத்தை விற்க முயற்சித்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சத்தியமங்கலம் துணை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கிறிஸ்தவா்கள் சனிக்கிழமை மனு அளித்தனா். சத்தியமங்கலம் ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், மேட்டுக்கடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக சூரியம்பாளையம் மற்றும் மேட்டுக்கடை துணை மின்நிலையங்களில் இருந்து மின்சாரம்பெறும் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது எ... மேலும் பார்க்க