மின்னணு பயிா் கணக்கீடு பணி: ஜூலை 24-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
பராசக்தி வெளியீட்டில் மாற்றம்?
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பராசக்தி படத்தின் வெளியீட்டில் மாற்றம் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி, மதராஸி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில், ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் மதராஸி முதலில் திரைக்கு வருகிறது.
அதேபோல், சில மாதங்களுக்கு முன் இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் துவங்கிய பராசக்தி படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
ஆனால், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தாமதமாகி தற்போது துவங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை 2026 பொங்கல் வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், இன்னும் 40 நாள் படப்பிடிப்பும் வெளியீட்டு பணிகளும் இருப்பதால் திட்டமிட்டபடி பொங்கல் வெளியீட்டிற்கு பராசக்தி வெளியாகாது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படமும் பொங்கலுக்கு வருவதால் படம் தள்ளிச்செல்லலாம் என்றே தெரிகிறது.
இதையும் படிக்க: ஃபஹத் ஃபாசில் மட்டும்தான் நடிகரா? வெளியானது மோகன்லாலின் ஹிருதயப்பூர்வம் டீசர்!